tamilnadu

img

ஆபத்தான சுற்றுச்சுவர்கள் இடிப்பு

மேட்டுப்பாளையம், டிச. 5- மேட்டுபாளையத்தில் பதினேழு பேர் உயிரிழப்புக்கு காரணமான சுற்றுச்சுவரின் மீதமுள்ள பகுதி மட்டு மின்றி, ஆபத்தான நிலையில் இருந்த பிற சுற்றுசுவர்களும் இடிக்கப்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் உள்ள நடூர் பகுதியில் கடந்த  திங்களன்று அதிகாலையில் கனமழை காரணமாக இருபதடி சுற் றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் ஒரு பகுதியானது அருகில் இருந்த நான்கு ஓட்டு வீடுகளின் மீது சரிந்த தால் வீடுகளுக்குள் இருந்த 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துய ரச் சம்பவத்திற்கு காரணமான சுவரின் மீதமுள்ள பகுதிகளையும், சம்பவ இடத்திற்கு அருகில் ஆபத்தான நிலை யில் உள்ள உயரமான சுவர்களையும் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர்.   இதனையடுத்து வியாழனன்று காலை மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சர்சைக்குரிய சுவற்றின் மீதமுள்ள பகுதிகளை பொக்லைன் இயந்தி ரத்தின் உதவியோடு இடித்தனர். பின் னர் அப்பகுதியில் ஆபத்தான நிலை யில் இருந்த அனைத்து சுவர்களும் இடிக்கப்பட்டது. இதற்கு சில வீட்டின்  உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித் தினர். ஆனால் அதிகாரிகள் அவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போலீஸ் பாதுகாப்புடன் அருகில் இருந்த விதிகளை மீறி உயரமாக கட்டப்பட்டிருந்த சுவர்களை இடித்த னர்.  அதேநேரம், நாங்கள் ஏற்கனவே கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை  எடுத்து அன்றே அரசு அதிகாரிகள் சுற்றுச்சுவரை அப்புறப்படுத்தியிருந் தால் 17 உயிர்கள் பறிபோயிருக்காது என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், இடிக்கப்பட்ட சுவர்களை மீண்டும் எழுப்ப அதன் உரிமையாளர்கள் முயற்சித்தால் போராட்டத்தில் இறங்குவோம் என் றும் கூறினர்.