திருப்பூர், ஆக. 30 - திருப்பூர் எம்.ஜி.புதூர் நடுநி லைப்பள்ளியை இடம் மாற்றம் செய்யும் முடிவை நடைமுறைப் படுத்துவதற்காக, அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற் றோரை இணங்க வைப்பதற்கு தெற்குத் தொகுதி எம்எல்ஏ சு.குண சேகரன் தீவிர முனைப்புக் காட்டி யிருக்கிறார். திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே பாரம்பரியம் மிக்க எம்.ஜி. புதூர் பள்ளி செயல்பட்டு வருகி றது. கடந்த இருபது ஆண்டு காலத் தில் படிப்படியாக இப்பள்ளியின் இடத்தை மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமித்து வாகன நிறுத்தம், சுகாதார ஆய்வாளர் அலுவலகம், அம்மா உணவகம் என மாற்றினர். தற்போது இருக்கும் அளவான இடத்தில் இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பேருந்து நிலைய த்தின் அருகிலும், அதன் பின்புற பகுதிகளிலும் இருக்கும் குடியிருப்பு மற்றும் ஏழை குழந் தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் சீர்மிகு நகரம் திட்டத்தில் இப்பள்ளியை நிரந்தர மாக மூடிவிட்டு, இந்த இடத்தில் வாகன நிறுத்தம் கட்டுவது என்று மாநகராட்சி நிர்வாகம் தன்னிச்சை யாக முடிவு செய்தது. திட்டம் வகுப் பதற்கு முன்பாக மாநகராட்சி நிர் வாகம் இப்பள்ளி பெற்றோர் ஆசிரி யர் கழகம், பள்ளி வளர்ச்சிக் குழு உள்பட யாரிடமும் கருத்துக் கேட் கவோ, ஆலோசனை நடத்தவோ இல்லை.
சீர்மிகு நகரத் திட்டத்தில் வணிக நோக்கிலான வாகன நிறுத்தம் அமைப்பதற்கு ஏழைக் குழந்தைகளின் பள்ளிக்கூடத்தை மூடுவதென்ற முடிவு திருப்பூர் நகர மக்கள் மத்தியில் கடும் அதி ருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்பள்ளியில் பெற்றோர் ஆசிரி யர் கழகக் கூட்டத்தை நடத்தி, மாந கராட்சி ஆணையர் சிவக்குமார் கலந்து கொண்டு இங்கு படிக்கும் குழந்தைகளை சுற்று வட்டாரத் தில் உள்ள பள்ளிகளுக்கு இடம் மாற்றிக் கொள்ளலாம் என்று கூறினார். இக்கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோர்கள் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். கடுமை யான போக்குவரத்து நெருக்கடி இருக்கும் பேருந்து நிலையப் பகுதி யில் சாலைகளைக் கடந்து சின்ன குழந்தைகள் செல்ல முடியாது, இப் பள்ளியை மூடும் முடிவை ஏற்க முடியாது. எக்காரணம் கொண்டும் இப்பள்ளியை மூடக் கூடாது என்று கடும் எதிர்ப்புத் தெரிவித்த னர். இதையடுத்து பாதியிலேயே இக்கூட்டத்தை விட்டு ஆணையர் சிவக்குமார் புறப்பட்டுச் சென் றார். இதன் பிறகு கடந்த சில தினங்களுக்கு முன்பு, மாநகராட்சி நிர்வாகம், இப்பள்ளியை மூடப் போவதில்லை, இடம் மாற்றம் செய்கிறோம் என்று தெரிவித்த னர். அதன்படி பேருந்து நிலையத் திற்கு எதிர்புறம் மாநகராட்சி சுகா தார அலுவலகம் இருக்கும் இடத் தில் போதிய இடவசதி இல்லாத கட்டிடத்தை பள்ளிக்கூடமாக மாற்றுவதாக தெரிவித்தனர். ஆக, எம்.ஜி.புதூர் பள்ளி இடத்தை எப்படியும் சீர்மிகு நக ரம் திட்டத்திற்காக கையகப்படுத் துவது, தற்போதுள்ள பள்ளிக் கட்டிடத்தை இடிப்பது என்பதில் அரசு நிர்வாகம் பிடிவாதமாக இருப்பது தெளிவானது. இந்நிலையில் வெள்ளியன்று இப்பள்ளியில் மாதாந்திர பெற் றோர் ஆசிரியர் கழகம் என ஒரு கூட் டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ சு.குணசேகரன் கலந்து கொண் டார். ஆளும் கட்சியினர் பலர் பங் கேற்ற நிலையில் பெற்றோர்கள் சுமார் 20 பேர் கலந்து கொண்ட னர். இவர்களிடம், எம்எல்ஏ குண சேகரன், பள்ளி குழந்தைகளை இடமாற்றம் செய்யப்பட்ட இடத் திற்கு கொண்டு போய் விடுவதற் கும், மாலை அழைத்து வருவதற் கும் இந்த ஆண்டு வாகன ஏற்பாடு செய்து தருகிறேன் என உறுதிய ளித்திருக்கிறார். மேலும் 20 பெற் றோர்களிடமும் பள்ளி இடமாற் றத்தை ஒப்புக் கொள்வதாக கையெழுத்துப் பெற்றுள்ளனர். இது குறித்து பெற்றோர் ஆசிரி யர் கழகத் தலைவர் செல்வராஜ் கூறும்போது, குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பகுதி பெற்றோர்கள் பங்கேற்காமலேயே கூட்டம் நடத்தப்பட்டது. இதில் இப்பள் ளியை இடம் மாற்றி, வாகன ஏற் பாடு செய்து தருவதாக எம்எல்ஏ சொல்லி பெற்றோரிடம் கையெ ழுத்துப் பெற்றிருக்கின்றனர். ஆனால் இப்பள்ளியை இடம் மாற்றம் செய்வதை பெரும்பா லான பெற்றோர்கள் ஏற்கவில்லை சீர்மிகு நகரத் திட்டத்தில் பள் ளியை மூடி, இக்கட்டிடத்தை இடிப் பது நியாயமல்ல. வாகன வசதி செய்து தருவதாக சொன்னாலும் இடமாற்றம் செய்யப்பட்ட பள் ளிக்கு குழந்தைகளின் போக்கு வரத்து சிரமமானதாகவும், ஆபத் தாகவும்தான் இருக்கும். எனவே இப்பள்ளியை மாற்றுவதை எதிர்த்து நாங்கள் உயர்நீதிமன்றத் தில் வழக்குத் தொடுக்கப் போகி றோம் என்றார். மக்கள் பிரதிநிதியாக தெற்கு எம்எல்ஏ குணசேகரன், மக்களின் கருத்துகளை அரசு நிர்வாகத்திடம் வாதாடி பள்ளியைப் பாதுகாப்ப தற்குப் மாறாக, இப்பள்ளியை இடிக்கும் அரசின் முடிவை மக் களை ஏற்கச் செய்வதற்கு என்ன காரணத்தினாலோ தீவிர முயற்சி மேற்கொண்டிருக்கிறார் என்று பெற்றோர்கள் வேதனையுடன் கூறினர்.