திருப்பூர், ஜூலை 25- திருப்பூர் அருகே திருவள்ளுவர் நகர் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பொதுமக்கள் வியாழனன்று வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். திருப்பூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட இடுவாய் ஊராட்சி, திருவள்ளுவர் நகரில் பல வருடங்களாக 28க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின் றனர். அரசு சார்பில் வழங்க கூடிய இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எவ்வித முயற்சியும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இதனால் திருவள்ளுவர் நகர் பகுதி மக்களுக்கு பட்டா இல்லாத காரணத்தால் குடிநீர், மின்சார இணைப்பு பெற முடி யாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செய லாளர் சி.மூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் க.கணேசன் மற்றும் 28 குடும்பத்தி னர்கள் தனித்தனியாக வட்டாட்சி யரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக் கையில், சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் வந்து ஆய்வு செய்து தங்களுக்கு உரிய வகையில் பட்டா வழங்க ஏற்பாடு செய்வ தாக அவர்களிடம் கூறினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.