tamilnadu

img

கொரோனா எதிரொலி - பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட கார்

கோவை, மே 18 –  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக பாதுகாப்பான வகையில் பயணம் மேற்கொள்ள, கோவையைச் சேர்ந்த கார் ஓட்டுனர் ஒருவர் வடிவமைத் துள்ள  வாகனம் அனைவரது கவனத் த்தையும் ஈர்த்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின்  தாக்கம் அதிகரித்து வருவதை யடுத்து ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டு தற்போது தளர்வு செய்யப்பட் டுள்ளது. இந்நிலையில் ஓட்டுனர் களும், பயணிகளும் தனிமனித இடைவெளியுடன் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளுவது அவசிய மான ஒன்றாக மாறியுள்ளது. தற்போது கொண்டுவரப்பட்ட தளர்வுகளின் படி 34 வகையான கடைகள் நிபந்தனைகளுடன் இயங்கி வருகிறது.

இதேபோல் புதிய நிபந்தனைகள் அரசால் அறிவிக் கப்பட்டுள்ள நிலையில் கால் டாக்ஸி ஓட்டுனர்கள் தங்கள்  வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ளவும், பாதுகாப்பான பய ணம் மேற்கொள்ளவும் புது முயற்சி களை கையாள துவங்கியுள்ளனர்.   இதன் ஒருபகுதியாக, கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் அமர்நாத் தனது காரில் வரும் வாடிக்கையாளர் களால் தனக்கு கொரோனா தொற்று  ஏற்படாமல்  இருக்கவும்,  மற்றவர் களுக்கு பரவாமல் இருக்கவும் தனி மனித இடைவெளியை கடைபிடிக் கும் வகையில் புதிய கண்டுபிடிப்பை கையாண்டுள்ளார்.  அதன்படி,  காரின் உள்ளே பாதுகாப்பான இடைவெளியை பின்பற்ற மைக்கா கவர்களை காரின் உட்பகுதியில் ஒட்டியுள்ளார்.

இது குறித்து ஒட்டுநர் அமர்நாத் கூறுகையில் :  மைக்கா கவர்களை பயன்படுத்தி கொரோனா கேபின் கேன்வாஷ்களை, கார் இன்டிரியர் பணி மேற்கொள்ளும் பிலால் என் பவரின் உதவியுடன் தயாரித் துள்ளோம். அதேபோல் மைக்கா கவர் உதவியுடன் ஒரு தனி கம்பார்ட் மென்டை உருவாக்கி உள்ளோம்.  இதன்மூலம் வாடிக்கையாளர்கள் அமரும் பகுதி மற்றும் ஓட்டுனருக்கான பகுதி இரண்டும் தனித்தனியாக பிரிக் கப்படுகிறது. இது ஓட்டுனர் களுக்கும், பயணிப்பவர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்றார். இதுகுறித்து கோவை என்.எச். சாலையில் கார் இன்டீரியல் கடை  வைத்திருக்கும் பிலால் கூறுகை யில்: பொதுமக்கள் பாதுகாப்பா கவும், தைரியமாகவும் பயணம் செய்ய இந்த புதிய முறை உதவு கிறது.

கேரளாவை தொடர்ந்து தற் போது கோவையில் முதன் முறை யாக இந்த தயாரிப்பு மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதை பொதுமக்கள் தைரியமாக பயன்படுத்தலாம். மேலும் வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்வுகள் ஒருபுறம் அச்சத்தை ஏற்படுத் தினாலும், மறுபுறம் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள கொண்டு வரப்படும். தனிமனித இடை வெளியை பின்பற்றி நோய் பர வலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப் பட்ட தனிமனித முயற்சிகள் தங் களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

;