tamilnadu

img

கொரோனா பரவலை கட்டுப்படுத்து - லாபத்திற்காக போக்குவரத்து ஊழியர்களை பலியாக்காதே போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூன் 15 -  கொரோனா பரவலை கட்டுப் படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டீசலைக் காரணம் காட்டி லாபத்திற்காக போக்குவ ரத்து ஊழியர்களை பலியாக் கும் கழக நிர்வாகத்தை கண்டித்து கோவையில் அனைத்து பணிம னைகள் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா ஊரடங்கு உத்த ரவு காரணமாக அனைத்து பகுதிக ளிலும் 50 சதவிகித பேருந்துகள், 60 சதவிகித பயணிகளுடன் இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள் ளது. பேருந்துகள் போதுமானதாக இல்லாததால் பயணிகள் பொறு மையிழந்து ஓட்டுநர், நடத்துனர் கட்டுப்பாட்டை மீறி பேருந்தில் ஏறுகின்றனர். இதனால், தனி மனித இடைவெளி கடைபிடிக்கப் படாமல் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும், கூடு தல் பேருந்துகளை இயக்க வேண் டும் என போக்குவரத்துத் தொழி லாளர்கள் தொடர்ந்து கூறி வரு கின்றனர். இதனைத்தொடர்ந்து, திங்க ளன்று மாநிலம் முழுவதும் அனைத்து பணிமனைகள் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட அனைத்து போக்குவரத்து சங் கங்கள் அறைகூவல் விடுத்தது.

இதன்ஒருபகுதியாக கோவையில் சுங்கம், ஒண்டிப்புதூர், உக்கடம்  உள்ளிட்ட 14 பணிமனைகள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், நாள்தோறும் பேருந்து கள் மற்றும் பணிமனை, கழிவறை,  ஓய்வறை ஆகிவற்றை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். போக்குவரத்து தொழி லாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.  லாபத்திற்காக அதிக வசூல் தொகை கேட்கும் போக்கை கிளை நிர்வாகம் கைவிட வேண் டும் என்பதை வலியுறுத்தி முழக் கங்களை எழுப்பினர். கோவை  சுங் கம் பணிமனை முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு  போக்குவரத்து சங்க பொதுச் செய லாளர் வேளாங்கண்ணிராஜ், அருணகிரிநாதன், எல்பிஎப் நாக ராஜ்,எம்ஐடியுசி அண்ணாதுரை, பணியாளர் சங்கம் வில்லியம்ஸ் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் ஏராளமான போக்குவரத் துத் தொழிலாளர்கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப் பினர்.

;