tamilnadu

img

சுரண்டலுக்குள்ளாகும் ஒப்பந்த தொழிலாளர்கள்

சிஐடியு குடிநீர் வடிகால் வாரிய சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை, அக்.15–  குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலா ளர்கள் சட்ட சலுகைகள் மறுக்கப் பட்டு தொடர்ந்து சுரண்டலுக் குள்ளாவதாக குற்றம்சாட்டி சிஐ டியு குடிநீர் வடிகால் வாரிய ஊழி யர் சங்கத்தின் சார்பில் செவ்வா யன்று கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் ஏராளமான கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத் தப்பட்டு வருகிறது. இதில் பணி யாற்றி வந்த நிரந்தர தொழிலா ளர்கள் சிறுக, சிறுக அகற்றப் பட்டு தற்போது பெரும்பாலான பணியிடங்களில் ஒப்பந்த தொழி லாளர்களை வாரியம் பணியில் அமர்த்தி வருகிறது. அதேநேரம், கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இந்த ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் தொடர்ந்து மறுக்கப் பட்டு வருகிறது. குறிப்பாக, இபிஎப், இஎஸ்ஐ போன்ற பாது காப்பு திட்டங்களுக்காக போடப் பட்ட ஒப்பந்தங்களை அப்பட்ட மாக ஒப்பந்த்தாரர்கள் மீறி வரு கின்றனர்.  மேலும், 8 மணிநேர வேலை என்றில்லாமல் 12 மணிநேரம் வரை வேலை வாங்குவதும், ஒப் பந்தப்படியான கூலியைக்கூட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் தொடர்ந்து சுரண்டலுக்கு உள்ளாகி வரு கின்றனர்.

இந்த முறைகேட் டிற்கு குடிநீர் வடிகால் வாரிய  அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக குற்றம்சாட்டி சிஐடியு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்  சங்கம் சார்பில் செவ்வாயன்று கோவை விளாங்குறிச்சி சாலை யில் உள்ள மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இப்போராட்டத்திற்கு சம் மேளன தலைவர் எம்.பால குமார் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக் கங்கள் குறித்து பொதுச்செய லாளர் ஆர்.சரவணன், பொரு ளாளர் கே.ஆர்.ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் பிரான்சிஸ், அன்பரசன், சக்திவேல் ஆகியோர்  உரையாற்றினர். இந்த போராட் டத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சார்ந்த  நிரந்திர மற்றும் ஒப்பந்த தொழி லாளர்கள் நூற்றுக்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர்.  இதற்கிடையே போராட் டத்தில் ஈடுபட்டவர்களிடையே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தக்கூட முன்வராத நிலையில் ஆவேசமடைந்த தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாமல் அலுவலக வளாகத்திலேயே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனையடுத்து மாலை யில் அதிகாரிகள் சங்க நிர்வாகி களுடன் பேச்சுவார்த்தை நடத்தி னர். தொடர்ந்து புதனன்று பேச்சு வார்த்தை நடத்தி உரிய தீர்வு  காணப்படும் என உறுதியளித்த னர். இதனைத்தொடர்ந்து தொழி லாளர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

;