அவிநாசி, நவ. 28- அவிநாசி அருகே நடுவச்சேரி செல்லும் சாலையில் போக்குவரத்து தடைபடாமல் இருக்க தரைமட்ட பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. அவிநாசி ஒன்றியம், மடத்துபாளையம் செல்லும் சாலையில் இருந்து நடுவச்சேரி செல்லும் சாலை வரை மழை காலத்தில் மழை நீர் தேங்கி வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வந்தது. ஆகவே, இப்பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பில் தரை மட்ட பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. அடுத்த ஒரு மாத காலத்தில் இப்பணிகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.