tamilnadu

img

துப்புரவுப் பணியாளர் மீது தாக்குதல் கோவையில் காவல்நிலையம் முற்றுகை

கோவை, ஆக.12- கோவையில் துப்புரவுப் பணியா வரை தாக்கியவரைக் கைது  செய்யக்கோரி துப்புரவுப் பணியார் கள் பணிகளை புறக்கணித்து  காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகராட்சி 83 ஆவது வார்டுக்கு  உட்பட்ட தெலுங்கு வீதியில் பதனன்று காலை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர் லட்சுமி என்ப வர் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந் தார்.  அப்போது, லட்சுமிக்கும் அதே பகு தியைச் சேர்ந்த குடியிருப்பு வாசி ராஜேஸ்வரி என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, லட்சுமியை ராஜேஸ்வரி  தாக்கியுள்ளார். மேலும் லட்சுமியின் சாதி குறித்தும் இழிவாகப் பேசியதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து குடியிருப்புவாசி ராஜேஸ்வரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 50க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் பணிகளைப் புறக்க ணித்து பெரிய கடை வீதி காவல் நிலை யத்தை முற்றுகையட்டனர். அப்போது ராஜேஸ்வரி மீது நடவடிக்கை எடுக் கும் வரை பணிகளுக்குத் திரும்ப மாட்டோம் என கோரிக்கை முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து லட்சுமியிடம்  புகார் பெற்ற காவல் துறையினர், ராஜேஸ்வரியை காவல் நிலையத் திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜேஸ் வரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என போலீசார் தெரிவித்ததைத் தொடர்ந்து துப்புரவுப் பணியாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணி களுக்கு திரும்பினர்.

;