tamilnadu

img

கோவை- பெங்களூருக்கு இரவு நேர ரயில் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு கோவை எம்.பி. வலியுறுத்தல்

கோவை, ஆக. 29- சேலம் ரயில்வே கோட்டத் திற்குட்பட்ட கோயம்புத்தூர் பகுதி ரயில்வே பயணிகளின் சார்பாக பெங்களூருக்கு இரவு நேர ரயில் சேவை உள்ளிட்ட ரயில்வே தேவைகள் மற்றும் மேம்பாடு சம்பந்தமாக தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது, சென்னையில் செப்டம்பர் முதல்வாரத்தில் தென் னக ரயில்வே பொதுமேலாளர் தலைமையில் தமிழகத்தின் ரயில்வே துறையின் சார்பில் செயல்படுத்த வேண்டிய கோரிக் கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கிற கூட் டம் நடைபெற உள்ளது. இதில் கோவை ரயில் பயணிகளின் நீண்டகால கோரிக்கை களாக உள்ளவற்றை நிறை வேற்ற வேண்டும் என வலியுறுத் தியுள்ளோம். இதன்படி புதிய ரயில் வழித்தடங்களாக கோவை- பெங்களூர் இரவு நேர ரயில், கோவை—மதுரை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், கோவை -ராமேஸ் வரம் வழி, பொள்ளாச்சி -மதுரை -திருநெல்வேலி, கோவை கொல் லம் - வழி பொள்ளாச்சி, மதுரை, தென்காசி, செங்கோட்டை மற் றும் சென்னை - திருப்பூர் டாலர் சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகிய புதிய ரயில்களை இயக்க வேண்டும்.  இதேபோல், கோவை - நாகர் கோவில் போத்தனூர், பொள் ளாச்சி, மதுரை வழியிலும், கோவை-பொள்ளாச்சி ரயிலை நிரந்தரப்படுத்த வேண்டும். போத்தனூர் – பொள்ளாச்சி மின் தடமாக மாற்ற வேண்டும், கோவை - நாகர்கோவில்/தூத் துக்குடி ரயில் புறப்படுதல்/வந்து சேருதல் நேரத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.  மேலும், மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் நடைபெறும் தரைப்பாலம், ரயில்வே மேம்பா லங்கள் விரைவில் கட்டி முடிக் கப்படவேண்டும். கோவை ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண் டும். கோவை ரயில் நிலையத்தில் மழைக்காலங்களில் நீர் கசிகி றது. இதனால் பயணிகள் பெரி தும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். பெண்கள் மற்றும் முதியோர் வசதிக்காக இரண்டு லிப்ட் வச திகள் செய்து தரப்பட வேண் டும். பீளமேடு சோமனுர் ரயில் நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகி றது. அதேநேரத்தில் இந்த ரயில் நிலையங்களில் உள்ள நடை மேடை ரயில் பெட்டிகளின் எண் ணிக்கைக்கு ஏற்ப நீளப்படுத்தாத தால் தரையில் இருந்து ரயி லில் ஏறுவதற்கு பயணிகள் பெரி தும் சிரமத்திற்குள்ளாகின்றனர். ஆகவே, தற்போதைய எக்ஸ் பிரஸ் ரயில்களின் பெட்டிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பட நடை மேடையின் நீளத்தை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை பரிசீலனை செய்ய விவா தத்திற்கு எடுக்க வேண்டும். இது குறித்து சென்னையில் நடைபெ றும் கூட்டத்தில் விரிவாக விவா திக்க உள்ளதாக அந்த அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.

;