குற்ற செயல்களை கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள்
கோவை, ஜூன் 22- சாயிபாபாகாலனி பகுதியில் கண்காணிப்பு கேமராக் கள் மற்றும் காவலர் உடற்பயிற்சிக் கூடம் தொடக்க விழா சனியன்று நடைபெற்றது. கோவை மாநகரில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளை அடையாளம் கண்டு விரைந்து கைது செய்யவும் காவல் துறையின் முயற்சியில் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணி கள் நடைபெற்று வருகிறது. அதேபோல, பழைய காவல் நிலையங்கள் நவீன வசதி களுடன் புணரமைக்கப்பட்டும் வருகின்றன. இந்நிலை யில், கோவை சி3 - சாயிபாபாகாலனி காவல் நிலைய எல் லைக்குட்பட்ட பகுதிகளில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் 50 கண்காணிப்பு கேமராக்களும், 4.5 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சியும் சாலையும், 16 லட்சம் மதிப்பீட்டில் மின்தூக்கியும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழாவானது சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் நடைபெற்றது. இந்த துவக்க விழாவில் மாந கர காவல் ஆணையாளர் சுமித்சரண், சட்டம், ஒழுங்கு துணை ஆணையாளர் பாலாஜி சரவணன், குற்றப்பிரிவு ஆணையாளர் பெருமாள் மற்றும் உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் சாய்பாபா காலனி பகுதியைச் சுற்றியுள்ள சமூக அமைப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்கள் சேலம் சிறைக்கு மாற்றம்
கோவை, ஜூன் 22- பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 பேர் சேலம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த மார்ச் மாதம் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவியை காரில் வைத்து நான்கு பேர் பாலியல் துன்புறத்தல் செய்துள்ளனர். மேலும் இதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டல் கொடுத்தாக பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த குமார் மற்றும் சதிஷ் கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டனர். இதனைத் தொடர்ந்து மேலும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி யது. இதனால் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முற்போக்கு அமைப்புகள், மகளிர், மாணவர் மற்றும் பொதுமக்களின் தன்னெழுச்சியாக போராட் டங்களைத் தொடர்ந்து வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப் பட்டது. எனினும் போராட்டங்கள் ஓயாத நிலையில் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணை நடத்தி வழக்கில் 5 வது நபராக மணி வண்ணனை சேர்த்து சிறையில் அடைத்தனர். பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தது, ஆபாச வீடியோ பதிவு செய்து மிரட்டல் விடுத்த பிரிவுகளில் , திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதிஷ் மற்றும் மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவ்வழக்கில் சிபிஐ கடந்த சில வாரங்களுக்கு முன் முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் அவர்கள் சனியன்று காலை சேலம் மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு காரணத்திற்காக இவர்கள் மாற்றப்பட்டுள் ளதாக சிறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம்
கோவை, ஜூன் 22- அஞ்சல் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் கோவை குட்செட் சாலையிலுள்ள மண்டல முதுநிலை கண்காணிப் பாளர் அலுவலகத்தில் ஜூன் 26ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. கோவை மண்டல அஞ்சல் சேவை தொடர்பான புகார் மற்றும் ஆலோசனைகள் இருப்பின் வரும் 25ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர் சேவை மையம், முதுநிலை கண்காணிப் பாளர், கோவை மண்டலம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக் குமாறு கோவை மண்டல முதுநிலை அஞ்சல் கண்காணிப் பாளர் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.
சிவகிரியில் ரூ.68 லட்சத்திற்கு எள் விற்பனை
ஈரோடு, ஜூன் 22- சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 68 லட் சத்துக்கு எள் விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம், சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்வெள்ளியன்று எள் ஏலம் நடைபெற்றது. கொடு முடி வட்டாரத்துக்கு உள்பட்ட பகுதிகளிலிருந்து விவசாயி கள் 894 எள் மூட்டைகளை விற்பனைக்குக் கொண்டு வந்தி ருந்தனர். இதில், சிறப்பு ரக எள் அதிகபட்ச விலையாக கிலோ ரூ.117.89 க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.94.99 க்கும் விற்பனையானது. கருப்பு ரக எள் அதிகபட்ச விலையாக கிலோ ரூ.123.19க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.103.99 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 68 லட்சத்து 70 ஆயிரத்து 203 க்கு விற்பனை நடைபெற்றது.