tamilnadu

img

கோவை மாநகராட்சியின் பணி நியமன முறைகேடு 2 ஆவது நாளாக துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

கோவை, மார்ச் 10– கோவை மாநகராட்சியில் நடை பெற்ற பணி நியமன முறைகேட்டை கண்டித்து இரண்டாவது நாளாக துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சியில் பல ஆண்டுகாலம் பணியாற்றி் வரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்திர பணியில் முன்னுரிமை அளிக்காமல், ஊழல் நடவடிக்கையின் மூலம் பணி நியமனம் செய்ததாக குற்றம்சாட்டி கோவை மாநகராட்சி ஒப்பந்தத் துப்பு ரவு தொழிலாளர்கள் திங்கள் முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  மாநகராட்சியில் உள்ள நூறு வார் டுகளிலும் பணிகளை புறக்கணித்து  இரண்டாவது நாளான செவ்வா யன்று கோவை மாநகராட்சி அலுவல கத்தை ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். ஆவேசமாகப் போராடிக்கொண்டிருக்கிற தொழி லாளர்களை மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்துப் பேசினர். இதில் அரசுக்கு பரிந்துரை செய்கிறோம் என தெரிவித்துள்ளனர். ஆனால், எங்களுக்கு பணியில் முன்னுரிமை வழங்காமல் பணிக்குத் திரும்ப மாட்டோம் என உறுதியாக அறிவித்துவிட்டு தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து வெளியேறினர். இந்நி லையில் ஒப்பந்தத் துப்புரவு தொழிலா ளர்களின் போராட்டத்திற்கு ஆதர வாக நிரந்திர தொழிலாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ள னர்.  இதன்காரணமாக கோவை மாநக ரத்தின் தூய்மைப்பணி கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சங்க வித்தியாசமின்றி துப்புரவு தொழி லாளர்கள் ஒன்றுபட்டு கோவை மாநக ராட்சி மற்றும் அமைச்சரை எதிர்த்து போர்க்குரல் உயர்த்தியுள்ள சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

;