tamilnadu

img

அரசுப் பள்ளி கழிப்பறைகளில் தூய்மைப் பணி

திருப்பூர், பிப். 25 - திருப்பூர் நிழல் அறக்கட்டளை சார்பில் திருப்பூரில் ஆறு அரசுப் பள்ளிகளில் உள்ள கழிவறைகளைச் சுத்தம் செய்து, குழந்தைக ளின் சுகாதாரம் காத்திட விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் நிழல் அறக்கட்டளை நிறுவ னர் ந.தெய்வராஜ், செயலாளர் தேன்மொழி, பொருளாளர் தெ.சிவகாமி மற்றும் உறுப்பி னர்கள் சண்முகராஜ், செல்வராஜ், கோமதி, பிரேம்குமார், ரமேஷ் பட்டேல், சுந்தரராஜ், ஜோதி, தேவபாலன், சுந்தரம் உள்ளிட்டோர் செவ்வாயன்று இப்பணியில் ஈடுபட்டனர். திருப்பூர் ஆத்துப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சத்யாநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அனுப் பர்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கவிதாலட்சுமி நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பெரியார் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற் றும் நடுநிலைப் பள்ளி ஆகிய ஆறு பள்ளி களில் உள்ள கழிவறைகளை இந்த குழுவி னர் சுத்தம் செய்தனர்.