tamilnadu

சென்னை மற்றும் தருமபுரி முக்கிய செய்திகள்

தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கைகள்: அரசு தலையிட வலியுறுத்தி நாளை சிஐடியு ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூன் 11- தொழிலாளர் மீதான பழிவாங்கல் நடவடிக்கைகளில் தமிழக அரசு தலையிட வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஜூன் 13ல் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.  இதுதொடர்பாக சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்த ரராசன், பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழிலாளர் அடிப்படை உரிமையான தொழிற்சங்கம் வைக்கும் உரிமை அடியோடு மறுக்கப்படுகிறது. இதனையும் மீறி  சங்கம் வைத்தால் தொழிலாளர்கள் பணிநீக்கம், பணியிடை நீக்கம், இடமாற்றம், சம்பளம் பிடித்தம், பணியிடத்தில் பாகு பாடு என பல்வேறு விதமான பழிவாங்கல் நடவடிக்கை களில் நிர்வாகங்கள் ஈடுபடுகின்றன. தொழிலாளர்  சட்டங்கள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. தொழிலாளர் துறையின் சமரச முயற்சிகளையும், அறிவுரைகளையும் ஏற்க மறுக்கின்றன. அரசு இயந்திரங்களும், காவல் துறையும் முதலாளிகளின் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டும் காணாமல் உள்ளன. சென்னை மெட்ரோ ரெயில்வே ஊழியர்கள் சங்கம் அமைத்ததை ஏற்கமறுத்த மெட்ரோ நிர்வாகம்  சங்க நிர்வாகி களை பழிவாங்கும் நோக்கத்தோடு 7 பேரை வேலைநீக்கம் செய்தது. அதனைக் கண்டித்தும் வேலைநீக்கத்தை ரத்து செய்யக்கோரியும் மெட்ரோ ரயில்வே ஊழியர்கள் கடந்த மாதம் 3 நாட்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடு பட்டனர்.  இதனைத் தொடர்ந்து மெட்ரோ நிர்வாகம் தொடர்ந்து ஊழியர்களை பழிவாங்கும் போக்கில் ஈடு பட்டு வருவதை தடுக்கவும், தொழிற்சங்க உரிமையை நிலை நாட்டவும் தமிழக அரசு முன்வர வேண்டும். அஸாஹி நிறுவனத்தில் சங்கம் அமைத்த காரணத்திற் காக 28 பேர் வேலைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 73  நாட்களாகத் தொடர் வேலைநிறுத்தப்போராட்டம் நடை பெற்று வருகிறது. இது போன்று டாங்சன், ராயல் என்பீல்டு போன்ற நிறுவனங்களிலும் சங்கத்தை ஏற்க மறுத்து பழி வாங்கல் நடவடிக்கைகள் தொடர்கின்றன. இப்பிரச்சனை களில் தமிழக அரசும். தொழிலாளர் துறையும் உடனடியாக தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும். சோவல் - அவாசின் நிறுவனங்களுக்கு இடையி லான பிரச்சனையில் வேலையிழந்துள்ள தொழிலாளர் களுக்கு தொடர்ந்து வேலையில் இருப்பதை உத்தரவாதப் படுத்தவும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதர வாக இருந்த  சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.முத்துகுமார் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெறவும் தமிழகஅரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சேலம் மேட்டூர் கெம்ப்ளாஸ்ட் நிறுவனத்தில் சங்கத்தை ஏற்க மறுத்து 99 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்யப் பட்ட பிரச்சனையில் சுமூக தீர்வு காண  வேண்டும்.காஞ்சி புரம் மாவட்டத்தில் நோக்கியா, பாக்ஸ்கான், அவாசின், சோவல் போன்று பல தொழில் நிறுவனங்கள் சட்டவி ரோதமாக மூடிவிட்டு ஓடி விடுகின்றன. இதனால் ஆயி ரக்கணக்கான தொழிலாளர் வேலையிழந்து பாதிக்க ப்பட்டுள்ளனர். தமிழக அரசும், தொழிலாளர் துறையும் இனியும் காலதா மதம் செய்யாமல் தொழிலாளர்கள் மீதான பழிவாங்கல் நடவடிக்கைகளை ரத்து செய்யவும், சங்கம் வைக்கும் உரிமையை நிலைநாட்டவும் ஆக்கப்பூர்வமான நடவ டிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி ஜூன் 13 ஆம் தேதியன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னையில், சேப்பாக்கம், அரசினர் விருந்தினர்  மாளிகை அருகில் மாலை நடைபெறும் ஆர்ப்பாட்டத் தில் அனைத்து பிரிவு தொழிலாளர்களும் திரளாக பங் கேற்க வேண்டுமென அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தருமபுரி அரசு மருத்துவமனையில் கைதிதப்பியோட்டம்

தருமபுரி, ஜூன் 11- தருமபுரி அரசு மருத்துவமனையில் தப்பியோடிய கைதியை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். தருமபுரி நகரம் குமாரசாமிபேட்டை ரயில்வே லைன் பகுதியைச் சேர்ந்தவர் மாது. இவருடைய மகன் வினோத் (22), கடந்த 8 ஆம் தேதி இரவு பெங்களூரில் இருந்து தருமபு ரிக்கு வந்த சாப்ட்வேர் என்ஜினியரை மிரட்டி 7 பவுன், ரூ.16 ,ஆயிரம் மற்றும் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான ஐபேடி னைபறித்த வழக்கில் வினோத் உள்ளிட்ட 3 பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர். இதனையடுத்து 3 பேரையும் தருமபுரி நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தினர். அப்போது வினோத்துக்கு காலில்காயம் இருந்ததால் அவரை நீதிபதியின் அறிவுரையின்படி தருமபுரி அரசு மருத் துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அங்கிருந்து செவ்வாயன்று அதி காலையில் வினோத் தப்பியுள்ளர். அவரை காவல் துறையினர்  தேடிவருகின்றனர்.

;