tamilnadu

img

டிஎன்பிஎஸ்சி ஊழியர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை: அரசு அனுமதி

சென்னை, பிப். 29- டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முறைகேடு வழக்கில் சிக்கிய ஊழியர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ்  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய  காவல்துறைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத் தில், மதுரையை சேர்ந்த திரு நங்கை ஸ்வப்னா என்பவர் தமிழ்  நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1 தேர்வில் முறைகேடு நடந்  துள்ளதாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதி பதி எஸ்.எம்.சுப்பிரமணியம், காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டார். 

இதன்படி சென்னை மத்திய  குற்றப்பிரிவு காவல்துறையினர் மோசடி உள்ளிட்ட சட்டப்பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்த னர். இந்த வழக்கில், டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள் உள்பட 6 பேரைகைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கி யப்பன் ஆகியோர் முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “குரூப்-1 தேர்வில் மிகப்பெரிய அளவில் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகளின் உதவியுடன் விடைத்தாள்களை திருத்தி மோசடி நடந்துள்ளது. உயர் அதிகாரிகள் முதல் கீழ்மட்ட பணியாளர்கள் வரை  அனைவருக்கும் இதில் தொடர்  புள்ளது. எனவே, இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்டு திமுக  மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்கவேண்டும்” என்று வாதிட்டார்.

அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி, “இந்த வழக்கு தொடர்பாக காவல் துறையின் புலன்விசாரணை முடிந்துவிட்டது. அதுதொடர் பான அறிக்கையும் ஏற்கனவே நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. விரைவில் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” என்றார். டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், “குரூப்-1 தேர்வு தொடர்பாக ஏற்க னவே டி.என்.பி.எஸ்.சி. சட்டப்  பூர்வமாக நடவடிக்கை எடுத்துள்  ளது. குரூப்-1 தேர்வு முறை கேட்டில் ஈடுபட்ட டி.என்.பி.எஸ்.சி.  ஊழியர்கள் மீது லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழும் குற்றம்  சாட்டப்பட்டுள்ளது. எனவே, அரசு ஊழியர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவேண்டும் என்றால், அதற்கு அரசிடம் முன்அனுமதி பெறவேண்டும். இந்த அனுமதியை அரசு வழங்கியுள்ளது. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய் யப்படும்” என்று வாதிட்டார்.

;