tamilnadu

போலி இ-பாஸ் - சொகுசு பேருந்துகள் சிறைப்பிடிப்பு

கோவை, ஜூலை 30- மகாராஷ்டிராவில் இருந்து கோவைக்கு போலி இ - பாஸ் மூலம் வந்த சொகுசு பேருந்து சிறைப்பிடிக்கப்பட்டு, விசா ரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக மாநில, மாவட்ட எல்லைகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், செவ்வா யன்று அதிகாலை மகாராஷ்டிராவில் இருந்து 25 பயணிக ளுடன் சொகுசு பேருந்து ஒன்று கோவையில் நுழைந்தது. இதையறிந்த காவல் துறையினர் கோவை நீலம்பூர் பகுதி யில் பேருந்தை நிறுத்தி விசாரிக்கையில் இ பாஸ் இல்லாமல் வந்ததும், அவர்கள் வைத்திருந்த இ பாஸ் மகாராஷ்டிரா முதல் மதுரை வரை என்று குறிப்பிடப்பட்டிருந்தது பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனைத்தொடர்ந்து பேருந்து சிறைபிடிக்கப்பட்டது. மேலும், பல மாநில எல் லைகளை கடந்து சொகுசுப் பேருந்து எப்படி கோவை வந் தது? போலி இ பாஸ் பெற்றது எப்படி? என பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;