tamilnadu

img

குடியுரிமை சட்ட திருத்தத்தை ரத்து செய்க

இடதுசாரி கட்சிகள் போராட்டம் - கைது

சேலம், டிச.19- மத்திய அரசு நிறைவேற்றி உள்ள குடியுரிமை சட்ட திருத் தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு வியாழனன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட இடது சாரி கட்சியினர் கைது செய்யப் பட்டனர். மத்திய பாஜக அரசின் குடி யுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரு கிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு வியாழனன்று மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  உள்ளிட்ட இடதுசாரிகள்  கட்சிகள் சார்பில்  ஆர்ப்பாட்டத் திற்கு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. ஆனால், இந்த போராட் டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும், தடையை  மீறி இடதுசாரி கட்சியினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் பி.ராம மூர்த்தி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பரம சிவம் முன்னிலை வகித்தார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம்  மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.வெங்கடபதி, ஆர்.குழந்தைவேல், எம்.குணசேகரன், எ.ராமமூர்த்தி, சேலம் கிழக்கு மாநகர செயலாளர் பி.ரமணி, மேற்கு மாநகர செயலாளர் எம். கனகராஜ், வடக்கு மாநகர செய லாளர் என்.பிரவீன்குமார், ஓமலூர்  தாலுகா செயலாளர் அரியாக் கவுண்டர், சிபிஐ கொண்டலாம் பட்டி பகுதி செயலாளர் கந்தன்,  தங்கமணி உள்ளிட்ட திரளான இடதுசாரி கட்சியினர் கலந்து கொண்டனர்.  இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் களை போலீசார் கைது செய்தனர்.

;