tamilnadu

img

தருமபுரி தொலைதொடர்பு மாவட்டத்தை சேலத்துடன் இணைப்பதா?

தருமபுரி, மே 17-பிஎஸ்என்எல் தருமபுரி தொலைதொடர்பு மாவட்டத்தை சேலம் மாவட்டத்துடன் இணைக்கும் உத்தரவை ரத்துசெய்யக்கோரி அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.பிஎஸ்என்எல் சந்தாதாரர்களுக்கு சிறந்த சேவை அளிக்கும் நோக்கத்தில், ஒன்றுபட்டசேலம் மாவட்டத்திலிருந்து துறை விரிவாக்கம் என்றஅடிப்படையில் 1983 ஆம் ஆண்டு தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கி தருமபுரி தொலைத்தொடர்பு மாவட்டம் உருவாக்கப்பட்டது. இவ்வட்டம் லாபகரமாக இயங்கி வரும் நிலையில், தற்போதுதொலைத் தொடர்பு நிர்வாகம் வரும்ஜுன்1 ஆம் தேதி முதல் சேலத்துடன்தருமபுரி மாவட்டத்தை இணைக்கும் முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவை கைவிடக்கோரியும், தொடர்ந்து லாபகரமாக செயல்பட்டு வரும் தருமபுரி மாவட்டத்தை தனி மாவட்டமாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் வெள்ளியன்று தொலைதொடர்பு அனைத்துஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் டி.பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.கிருஷ்ணன், ஊழியர் சங்க கூட்டமைப்பின் தலைவர்கள் கே.மணி, எம்.குப்புசாமி, அம்மாசி,பிரபாகரன், ஜோதிபிரகாஷ் மற்றும் அதிகாரிகள் சங்க தலைவர் கோபாலன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

;