tamilnadu

வால்பாறையில் கல்வித் தொலைக்காட்சி சேனலை ஒளிபரப்புக - சிஐடியு

பொள்ளாச்சி,  நவ.16-  வால்பாறையில் கல்வித் தொலைக் காட்சி சேனலை ஒளிபரப்ப நடவ டிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட  ஆட்சியருக்கு சிஐடியு வலியுறுத்தியுள் து.  இதுதொடர்பாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும்  அலுவலர்கள் சங்கத்தின் (சிஐடியு)  கோவை மாவட்ட செயலாளர் பி.பர மசிவம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ள தாவது, கொரோனா கால ஊரடங்கால்  8 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து ஆன்லைன் கல்வி முறை மற்றும் தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் எடுக்க தமிழக கல்வித்துறை முடிவு  செய்து எடுத்து வருகிறது. இதில், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கல்வி  தொலைக்காட்சி மூலமாக மாணவர்க ளுக்கு வகுப்புகள் எடுத்து வருகின்ற னர்.  இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கல்வி தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை. இதனால், அரசு பள்ளியில் படிக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குழந் தைகள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கல்வி கற்பதில் சிக்கல் ஏற்பட் டுள்ளது. எனவே, ஏழை, எளிய மாண வர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு வால்பாறை பகுதியில் கல்வி  தொலைக்காட்சி சேனலை ஒளிபரப்பு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மீது, கோவை  மாவட்ட ஆட்சியர் தனி கவனம் செலுத்தி உரிய தீர்வு காண வேண்டும் என அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

;