tamilnadu

img

டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்துக!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

உதகை, நவ.18- டாஸ்மாக் கடையை அப்புறப் படுத்தக் கோரி கிராம மக்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற் றது. இதில் இத்தலார் மற்றும் அதனை சுற்றியுள்ள ஐந்திற்கும் மேற்பட்ட கிராமங்களைச் சார்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், இத்தலார் பஜார்க்கு இத்தலார், பெம்பட்டி, பேலிதளா, போர்த்தி,  கோத் தண்டி, வினோபாஜி நகர், இந்திரா நகர் போர்த்தி ஆடா உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த மக்கள் அன்றாடம் வந்து செல்கின்றனர். எங்கள் ஊரில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. அதனை ஒட்டி மது பான பார் ஒன்றும் இருக்கிறது. இதன் அருகிலேயே  தனியார் மற்றும் அரசு பள்ளிகள், நூலகம், வங்கிகள், அரசு மருத்துவமனை, தேயிலை தொழிற்சாலை போன் றவை உள்ளன. இந்த மதுபான கடையில்  மது அருந்துவோர் சாலை களில் விழுந்து கிடப்பதும், ஆபாச வார்த்தைகளில் கூச்லிடுவது என விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக மகளிர் குழுக்களில் இருக்கும் பெண்கள் அருகில் உள்ள வங்கிகளுக்கு  அடிக்கடி செல்ல வேண்டி உள்ளதால் மது அருந்து வோர் செயல்களை கண்டு அந்த சாலையின் வழியாக செல்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். மாலை நேரங்களில் வீடு திரும்பும் பெண்களும், மாணவர்களும், மாணவிகளும் கடும் இன்னலுக்கு உள்ளாகிறார்கள். எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு இந்த மது பான கடையை உடனே இந்த பகுதியில் இருந்து அப்புறப்ப டுத்த வேண்டும் என வலியு றுத்தினர். முன்னதாக, மாவட்ட ஆட்சி யரை நேரில் சந்தித்து தனித்தனி யாக மனு கொடுக்க முற்பட்டவர் களை  காவல்துறையினர் கயிறு கட்டி தடுப்பை ஏற்படுத்தி தடுத்த னர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய காவல்துறையினர் ஊர் தலைவர் உள்ளிட்ட முக்கிய நபர் களை  மட்டும்  மனு கொடுக்க அழைத்து  சென்றனர். அங்கு மாவட்ட வருவாய் அலுவலர் நிர் மலா நேரில் ஆய்வு செய்து 10 நாட் களுக்குள் மதுபான கடையை அகற்றிட நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறியதை அடுத்து அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மனுவினை அளிக்கையில் சுமார் 100 பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படுக இன மக்கள் தங் களின் பாரம்பரிய உடைகளில் வந்தி ருந்தனர்.

;