கோவை, செப்.30– காந்தி பிறந்ததினமான அக்டோபர் 2 ஆம் தேதியன்று கோவை மாவட்டத்தில் மதுபானங்கள், இறைச்சி விற் பதற்கு மாவட்ட, மாநகர நிர்வாகங்கள் தடை விதித் துள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசா மணி, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் ஆகியோர் வெளியிட்ட செய் திக்குறிப்பில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் அதனுடன் இணைக் கப்பட்ட மதுபானக் கூடங்கள், பொழுதுபோக்கு மன மகிழ்மன்றம் போன்ற கிளப்களில் செயல்படும் மதுக் கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் வரும் அக்டோபர் 2 ஆம் தேதியன்று காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. விதி முறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதியில் மது பானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது சட்ட விதி களின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோல், கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை மூடும்படியும், அன் றைய தினம் கோயம்புத்தூர் மாநகராட்சியால் நடத் தப்பட்டு வரும் உக்கடம் ஆடு அறுவைமனை, சிங்கா நல்லூர் ஆடு அறுவைமனை, சத்தி ரோடு மற்றும் போத்த னூர் மாடு அறுவை மனைகள், துடியலூரில் ஆடு அறுவை மனை மற்றும் மாநகராட்சியில் கீழ் இயங்கும் 10 மாநகராட்சி இறைச்சிக் கடைகள் செயல்படாது. இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது மாநகராட்சி அதிகாரிகளால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.