tamilnadu

img

கனமழையால் வாழைத்தார் விலை வீழ்ச்சி

மேட்டுப்பாளையம், ஆக.17- கேரளாவில் பெய்து வரும் கனமழை யால் வாழைத்தார் தேங்கி விலை வீழ்ச்சி யடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை யடைந்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யத்தில் வாழைத்தார் ஏல மையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு உள்ளூரில் விளைவிக்கப்படும் வாழைத்தார்கள் மட்டுமின்றி திருச்சி, முசிறி, சத்தியமங்கலம், அன்னூர், புளியம்பட்டி, கோபி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் டன் கணக் கில் விற்பனைக்காக வாழைத்தார்கள் கொண்டு வரப்படுவது வழக்கம். இவை மொத்த வியாபாரிகளுக்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும். இப்படி விற்பனை செய்யப்படும் நேந்திரன், செவ்வாழை, தேன்வாழை, கதலி, ரஸ்தாளி, பூவன் ரக வாழைத்தார்கள் 60 சதவிகிதம் வரை கேரளாவிற்கும், மீதமுள்ள 40 சத விகிதம் வாழைத்தார்கள் தமிழகத்தின் பிற பகுதி வியாபாரிகளும் வாங்கி செல்வார் கள். இந்நிலையில் கடந்த இரு வார காலமாக கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்தும் பல இடங்களில் தடை பட்டுள்ளது. இதனால், மேட்டுப்பாளையம் வாழைத்தார் ஏல மையங்களுக்கு கேரள வியாபாரிகள் யாரும் வருவதில்லை. இதே போல், மழை பாதிப்பு காரணமாக நீல கிரியில் இருந்தும் வியாபாரிகள் வருகை வெகுவாக குறைந்து விட்டது. வியாபாரி கள் வருகை இல்லாததால் வாழைத்தார் களின் விலையும் சரிந்து விட்டது. சராசரி யாக ஒரு வாழைத்தாரின் விலை ரூ.70 லிருந்து ரூ.200 வரை தற்போது குறைந்து விட்டது.  குறிப்பாக கேரளாவிற்கு அதிகளவில் கொண்டு செல்லப்படும் நேந்திரன் வாழை கிலோ 45 ரூபாயில் இருந்து 24 ரூபாயாக குறைந்து விட்டது. இதனால் வாழை விவசாயிகள் போதிய விலை கிடைக்காமல் இழப்பை சந்தித்து வரு கின்றனர். கேரளா மற்றும் நீலகிரியில் மழை பாதிப்பு குறைந்து இயல்பு நிலை  ஏற்பட்டால் மட்டுமே வாழைத்தார் விற் பனை பழையபடி திரும்பும் என ஏல விற் பனை மையத்தினர் தெரிவிக்கின்றனர்.