tamilnadu

img

கோபியில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

கோபி, மார்ச்.3- கோபிசெட்டிபாளையத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு தனி யார் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறு வனத்தில் பெண்கள் பாதுகாப்பு  குறித்தும், பாலியல் வன்கொ டுமை குறித்தும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் அருகே உள்ள  வெள்ளாங்கோயிலில் செயல் பட்டு வரும் தனியார் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்று  உலக மகளிர் தினத்தை மார்ச் 3  ஆம் தேதி முதல் மார்ச் 8 ஆம் தேதி  வரை ஆறு நாட்கள் கொண்டாட திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்ப டையில் முதல் நாளானா செவ்வா யன்று பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பாலியல் வன்கொ டுமை குறித்தும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில் அந்நிறுவனத்தில் பணியாற் றும் 300க்கும் மேற்பட்ட பெண் கள் பேரணியாக சென்றனர். இப்பேரணி ஆயத்த ஆடை நிறு வனத்திலிருந்து தொடங்கி  வெள்ளாங்கோயில் ஊராட்சியின் முக்கிய வீதிகளின் வழியாக சென் றது. இதில் பெண்கள் பாதுகாப்பு குறித்து முழக்கங்களை எழுப்பிய படி பேரணியில் ஈடுபட்டனர்.  முன்னதாக, இந்நிகழ்ச்சியை வெள்ளாங்கோயில் ஊராட்சி மன்றத் தலைவர் சாமியாத்தாள், துணைத்தலைவர் தேவி, மனித வள மேம்பாட்டு அலுவலர் அருணா ஆகியோர் தொடங்கி வைத்தனர். பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு பேரணியை  சிறுவலூர் காவல் ஆய்வாளர்கள்  வெள்ளியங்கிரி மற்றும் ராஜேந்தி ரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.  இந்நிகழ் வில் தொழிலாளர் நல அலுவலர் வினோத்குமார், மேலாளர் செந் தில், ஊராட்சிமன்ற உறுப்பினர் தென்னரசு ஆகியோர் உட்பட ஏரா ளாமானோர் கலந்து கொண்ட னர்.

;