குளத்தில் சாக்கடை கலப்பதை தடுக்கக்கோரி மனு
அவிநாசி, ஆக.30- அவிநாசி அருகே குளத்தில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்கக் கோரி முதல்வர் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் முப்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தனித்தனி மனுக்களை அளித்தனர். அவிநாசி வட்டம், திருமுருகன் பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட ராக்கி யாபாளையத்தில் ஐஸ்வர்யா கார் டன் பகுதியில் முதல்வர் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக் கள் ராசாக் கோவில் குளத்தில் சாக் கடை நீரை கலப்பதை தடுத்து நிறுத் தக்கோரி செயல் அலுவலர் குண சேகரனிடம் மனு அளித்தனர். இம்ம னுவில் ராசாக்கோவில் அருகில் ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் சுமார் 60க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ராக்கியா பாளையத்திலிருந்து சாக்கடை நீர் அனைத்தும், ராசாக் கோயில் குளத் தில் விடப்படுகிறது. இதனால், குளம் மாசடைந்து வருகின்றது. மேலும், சுகாதாரக்கேடு ஏற்பட்டு, குடியிருப்பு வாசிகளுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக சாக்கடை கழி வுகள் குளத்தில் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறப்பட்டி ருந்தது. இதேகோரிக்கையை வலி யுறுத்தி முப்பதுக்கும் மேற்பட்டோர் தனித்தனியாக மனு அளித்தனர். இதேபோல்மகாலட்சுமி நகர், ஊமைசெட்டிபாளையத்தைச் சேர்ந்த மக்கள் சாக்கடை மற்றும் சாலை வசதி கோரியும் மனு அளித்த னர். இதுகுறித்து செயல் அலுவலரி டம் கேட்டபோது, கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் முகா மில் 1335 மனுக்கள் பெறப்பட்டன. இதில் பெரும்பகுதி குடியிருக்க வீடு கேட்டு மனு அளித்துள்ளனர். மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மனுக்கள் பெறப் பட்டுள்ளன. இம் மனுக்கள் துறை ரீதியாக பிரித்து அனுப்பப்படும் என தெரிவித்தார்.
கொப்பரை ஏலம்
திருப்பூர், ஆக. 30- வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதனன்று நடை பெற்ற ஏலத்தில் ரூ.22.13 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது. முன்னதாக, கரூர், திருச்சி, லாலாப்பேட்டை, மணல்மேடு, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதி விவ சாயிகள்் 551 மூட்டை கொப் பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
மின் தடை
திருப்பூர், ஆக. 30- கரடிவாவி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடை பெறவுள்ளதால் கரடிவாவி, கரடிவாவிபுதூர், செலக்கரச் சல், அப்பநாய்க்கன்பட்டி, அப்பநாய்க்கன்பட்டிபுதூர், கோடங்கிபாளையம், மல்லேகவுண்டன்பாளை யம், ஊத்துக்குளி, வேப்பங் குட்டை பாளையம், புளியம் பட்டி, கே.கிருஷ்ணாபுரம், மத்தநாயக்கன்பாளையம், அய்யம்பாளையம், ஆறாக் குளம், கே.என்.புரம் ஒரு பகுதி, பருவாயின் ஒரு பகுதி யில் செவ்வாயன்று (செப். 3) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பல்லடம் மின் வாரிய செயற் பொறியாளர் ஆர்.கோபால் தெரிவித்துள்ளார்.