கோவை, செப். 28 - கோவை கீரணத்தம் அருகே பட்ட பகலில் ஆட்டோ ஓட்டுனரை 2 பேர் சரமாரியாகத் வெட்டி கொலை செய்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது. கோவை சரவணம்பட்டி பகு தியை சேர்ந்த மனோகரன் என்பவ ரின் மகன் அருண்பிரசாத் (28). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வரு கிறார். இந்த நிலையில், அருண் பிர சாத் கோவில்பாளையம் பகுதிக்கு வாடகை சென்று கொண்டிருந்தபோது பின்பக்கமாக இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கு வழிவிடுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் பின் ஆட்டோ ஓட்டுனர் அருண் பிர சாத், கீரணத்தம் அருகே டீ குடிக்க ஆட்டோவை நிறுத்தியுள்ளார். அப் போது, அவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு பேர் கட்டிடத் தொழிலுக்குப் பயன்படுத்தும் ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி யோடியுள்ளனர். இதனால் அதிர்ச்சிடையந்த அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அருண்பிர சாத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முற்பட்டனர். ஆனால் அவர் மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் பரிதாப மாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக் காக கோவை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டுள் ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள் அதிக மாக கூடும் இடத்தில் ஆட்டோ ஓட்டு னரை கொடூரமாக கொலை செய் யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.