ஈரோடு, அக். 2- ஈரோட்டை அடுத்த நம்பியூர் அருகே பள்ளிப்பருவ நண்பனு டன் கை குலுக்கியதால் ஆத்திர மடைந்த ஆதிக்க சாதியினர் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரின் வீட்டிற்குள் புகுந்து கொலைவெறித் தாக்குதல் நடத் திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டம், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம், வரப்பாளையம் கிராம ஊராட்சியில் உள்ள ஒலப்பாளை யம் கிராமத்தில் கடந்த ஞாயிறன்று இரவு 7 மணியளவில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த வேலுச்சாமி (24) என்பவர் தனது பள்ளிப்பருவ நண்பரான ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த முருகேசு (24) என்பவரி டம் நலம் விசாரித்து கை குலுக்கி பேசியுள்ளார். இதனை அருகில் இருந்த சாதிய ஆதிக்க சமூகத்தை சார்ந்த இளைஞர் அருணாசலம் (17) என்பவர் கண்டு, எங்க பசங்க ளிடம் என்ன தைரியம் இருந்தால் கை குலுக்கி பேசுவீர்கள் என தகாத வார்த்தைகளால் வேலுச்சாமியை திட்டியுள்ளார். மேலும், படித்திருந்தால் மட் டும் எங்கள் சமூகத்தை சார்ந்தவர்க ளும், அருந்ததிய சாதியை சேர்ந்த நீங்களும் ஒன்றாக முடியாது என கூறி, அவரது சாதியை குறிப்பிட்டு மிக இழிவாக பேசி மிரட்டியுள் ளார். இதனால் இருதரப்பினருக் கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்த ஆதிக்க சமூகத்தை சேர்ந்த மேலும் சில இளைஞர்கள் வேலுச்சா மியை தாக்க முயன்றுள்ளனர்.
இதன்பின் அவர் அங்கிருந்த சென்ற நிலையில், அன்றைய தினம் இரவு சாதிய ஆதிக்க சமூ கத்தைச் சேர்ந்த முருகேசு, அரு ணாசலம் குடும்பத்தார் உட்பட 10க்கும் மேற்பட்டோர் கும்பலாக உருட்டு கட்டைகள், கற்களைக் கொண்டு வேலுசாமியின் வீட்டிற் குள் புகுந்து அவரது சாதியை இழிவுபடுத்தி பேசி கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் வேலுச் சாமி மற்றும் அவரது தாயார் சின்னப்புள்ளை உள்ளிட்ட நான்கு பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அவர்கள் புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகா தார நிலையம் சென்று சிகிச்சை பெற்றனர். பலத்த காயமடைந்த சின்னப்புள்ளை 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத் துவமணைக்கு கொண்டு செல் லப்பட்டார். ஆனால், சின்னப் புள்ளை ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை பெற்றவர் என்ப தால், மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதைத்தொடர்ந்து தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேலுச்சாமி புளி யம்பட்டி காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். ஆனால், காவல் துறையினர் வழக்கு பதிவு செய்யாமல் ஆதிக்க சாதியினருக்கு சாதகமான முறை யில் நடந்து கொண்டதாக கூறப் படுகிறது. இதையடுத்து பாதிக்கப் பட்டவர்கள் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகிகளிடம் முறையிட்டுள்ளனர். அப்போது, புளியம்பட்டி காவல் துறையினர் வழக்கை வாபஸ் பெற வைக்கும் நோக்கத்தோடு முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யாமல் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து பாதிக்கப் பட்டவர்களை, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் பி.பி.பழனிச்சாமி, தாலுகா செயலாளர் சத்திய மூர்த்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கே.ஆர். திருத்தணிகாசலம், சத்தி நகர செயலாளர் வாசு, மாற்றுத்திற னாளிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணி ஆகி யோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். இதன்பின் சத்தி யமங்கலம் துணை காவல் கண் காணிப்பாளரை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகி கள் சந்தித்து, சாதியை இழிவாக பேசி தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண் டும் என வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய 4 நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின் றனர்.