tamilnadu

img

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் திருவிழா

கொடியேற்றத்துடன் துவக்கம்

பொள்ளாச்சி, ஜன.24- பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் 91 அடி உயர மூங்கில் கம்பத்துடன் கொடியேற்றி குண்டம் திருவிழா துவங்கியது.  கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில்  பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில்  அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதக் குண்டம் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 2020 ஆம் ஆண்டிற்கான குண்டம் திரு விழா வரும் பிப். 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற் கான கொடியேற்று விழாவானது வெள்ளியன்று பெரும் விமர்சியாக நடைபெற்றது. ஆனைமலை புலிகள் காப்ப கத்தில் உள்ள சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து  91அடி  உயர மூங்கில் கம்பம் கொண்டு வரப்பட்டு கோவி லின் ராஜா கோபுரம் முன்பு  கொடி ஏற்றப்பட்டது. இக்கொடியேற்று விழாவிற்கு தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

;