tamilnadu

ஆனைமலை: வேலையின்றித் தவிக்கும் பழங்குடியின மக்கள் - அரசு நிவாரணம் வழங்க மலைவாழ் சங்கம் கோரிக்கை

பொள்ளாச்சி, ஆக. 25 - கொரோனா ஊரடங்கினால் வேலை வாய்ப்பின்றி அன்றாடம்  உணவிற்கே அவதிப்படும் பழங் குடியின மக்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ,7,500 உடனடி யாக வழங்கிடக்கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப் சிலிப்,  நாகரூத்து 1,மற்றும் 2,  எருமை பாறை, சின்னார்பதி, கோழிகமுத்தி உள்ளிட்ட 17 வனக் கிராமங்கள் அடர் வனப் பகுதியிலும்,  சர்கார்பதி, காக்கா  கொத்திப்பாறை, புளியங்கண்டி, ஆழியார், அன்பு நகர் உள்ளிட்ட 41  வன கிராமங்கள் சமவெளிப் பகுதி யிலும் அமைந்துள்ளன. இதில் 8 ஆயிரத்து 376 பழங்குடியின மக்கள் விவசாயம் மற்றும் விவசாயக் கூலித் தொழில் உள்ளிட்ட பல்வேறு வேலைகள் செய்து தங்களது  வாழ்வாதாரம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ஊரடங்கினால் வேறு பகுதிகளுக்கு வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் முற்றிலு மாக வேலை வாய்ப்பின்றி பழங் குடியின மக்கள் தவித்து வருகின்ற னர். இதில் பெரும்பாலோனோர் உண வின்றி சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு நிவார ணம் தங்களுக்க வழங்க வேண்டு மென   அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.எஸ்.பரமசிவம் கூறுகை யில், கொரோனா ஊரடங்கால் பழங்குடியின மக்கள் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குள்ளாகியுள்ளது.

வனக் கிராமங்களில் சொல்லி லடங்கா துயரத்தை உணவின்றி பழங் குடியின மக்கள் அனுபவித்து வரு கின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலை களில் பெய்து வரும் கனமழை காரண மாக காடுகளில் உணவு பலா, தேன், நெல்லி உள்ளிட்ட பொருட்கள் கூட சேகரிக்க முடியாத நிலையில் உள்ள னர். முதல்வர் அறிவித்த நிவாரணம் ஆயிரம் ரூபாய் முன்னதாக வழங்கப் பட்டது. ஆனால் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப் பகுதிகளில் 80 சதவிகித பழங் குடியின மக்களுக்கு பழங்குடியின நலவாரிய அட்டை வழங்கப்பட வில்லை

. இதனால் அந்த ஆயிரம் கூட இன்னமும் இவர்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே இச் சூழலில் வேலையின்றித் தவிக்கும் பழங்குடியின மக்களைக் காக்க அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ,7, 500 வழங்க வேண்டும். மேலும்,  பழங்குடியினர் நல வாரிய அட்டை கள் வழங்குவதோடு வனத்துறை களில் தற்காலிகப் பணிகளில் பழங் குடியின மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், இவ்வாறு  அவர் தெரிவித்தார்.

;