tamilnadu

img

பாஜகவின் புதிய கல்விக் கொள்கையை அமலாக்கும் அதிமுக அரசு அரசு பள்ளியில் வாழ்க்கைத் தொழில்கல்வி அறிமுகம்!

நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இந்திய நாட்டின் பிரதம ராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் புதிய கல்விக் கொள்கை வரைவு வெளியிடப்பட்டது. அதில் இந்தி மொழியை நாடு முழுவ தும் கட்டாயமாக்கியது. 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கள் அறிமுகப்படுத்தப்படும் என அறி விக்கப்பட்டது. ஆசிரியர்கள் நிய மனங்களும் தற்காலிக, ஒப்பந்த அடிப்படையிலேயே இனி மேற்கொள் ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.  மேலும் குழந்தை வளர்ச்சி மையம் என்ற அங்கன்வாடிகள் ஒருங்கிணைந்த பள்ளி களாக மாற்றப்படும் எனவும் அறிவிக் கப்பட்டது. அதேநேரம், இத்தகைய புதிய கல்விக் கொள்கை மாநில சுயாட் சிக்கு எதிரானது என்றும், குலக்கல் வியை நோக்கியவாறு உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து முற்போக்கு அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து மத்திய அரசு அமைதி காத்தது.  இந்நிலையில், மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்கிறோம் என்று அம்மாவின் வழியில் ஆட்சி நடத்துவதா கக் கூறும் எடப்பாடி அரசு கஸ்தூரிரங் கன் தலைமையிலான புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தத் தொடங்கி யுள்ளது. மத்தியில் ஆளும் பாஜகவின் கல்விக் கொள்கையை மாநிலங்களில் ஆளும் பாஜக அரசுகளே அமல்படுத்த தயங்கும் நிலையில், அதிமுக அரசு தயக்கமின்றி அமலாக்குகிறது. குறிப் பாக, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என அறிவித்துள்ளது. இது இடைநிற்றலுக்கு வழி வகுக்கும். உளவியல் ரீதியிலான பிரச்சனைகளை உருவாக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என்கிறது எடப்பாடி அரசு.
வாழ்க்கைத் தொழில் கல்வி
புதிய கல்விக் கொள்கையில் உயர் கல்வி அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக தொழிற்கல்வி இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் வாழ்க்கைத் தொழில்கல்வி அனைத்து கல்வியிலும் ஒருங்கிணைந்த பகுதி யாக இருக்கும் என்கிறது. மேலும் 2025 ஆம் ஆண்டிற்குள் எல்லா மாணவர்க ளுக்கும் குறைந்தபட்சம் 50 விழுக்காடு வாழ்க்கைத் தொழில் கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதை இலக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.  இச்சூழலில், இதனை கோவையில் உள்ள நடுநிலைப்பள்ளியில் அமல் படுத்த துவங்கியுள்ளது. கோவை மாநகரில் மசக்காளிப்பாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ளது. சுமார் 400 மாணவ,  மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு எல்கேஜி, யுகேஜி முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி யும் போதிக்கப்படுகிறது. ஆங்கில வழிக்கல்வி பயில்வதற்கென தனி வகுப்பறையோ, தனி ஆசிரியர்களோ இல்லை. மூன்று கட்டிடங்கள் மற்றும் ஒரு சமையல் கூடம், அதற்கு நடுவில் உள்ள காலியிடத்தை விளையாட்டு மைதானமாகக் கொண்டு பள்ளி இயங்கி வருகிறது. ஏற்கனவே மூன்று வகுப்பறை களை அம்மா உணவகத்திற்கு விட்டுக்  கொடுத்துள்ள இப்பள்ளியின் வளாகத் தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மையமும் செயல்பட்டு வந்தது. அது தற்போது தொழிற் கூடமாக மாறியுள்ளது. தையல் வகுப்பு கள் இங்கே நடைபெறுகின்றன. வாரத் தில் இரண்டு நாட்கள் மட்டும் வகுப்பு கள் நடைபெறுகிறது. அடுத்த 5 ஆண்டு களில் இப்பள்ளியின் மாணவ, மாணவி கள் அனைவரும் 50 விழுக்காடு வாழ்க் கைத்தொழில்கல்வியைப் பெறவேண் டும் என்பதே இலக்காக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. ஆகவே, மத்திய பாஜக அர சின் நயவஞ்சக திட்டமான புதிய கல்விக்  கொள்கையை பெரியார், அண்ணா வழியில் வந்ததாக கூறிக்கொள்ளும் அதி முக அரசு எவ்வித எதிர்ப்பும் இன்றி அமல்படுத்த துவங்கிவிட்டது. - ராஜ்வேல்

;