வாலிபர் சங்க தலையீட்டால் தீர்வு
கோவை, மே 15 – கோவை அருகே குடிமகனுக்கான எவ்வித அரசு ஆவணங்களுமின்றி தவித்த பழங்குடி மக்களின் நிலை அறிந்து, வாலிபர் சங்கத்தினர் மேற்கொண்ட தலை யீட்டிற்கு பிறகு தற்போது அரசு நிர்வாகம் மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேற் கொள்ள துரித நடவடிக்கை மேற்கொண் டுள்ளது. கோவை மாவட்டம், மதுக்கரை தாலு காவிற்குட்பட்ட திருமலையாம்பாளையம் பேரூராட்சி பகுதியில் ரொட்டி கவுண்ட னூர் என்கிற பகுதி உள்ளது. இங்கே பழங்கு டியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தலைமுறை தாண்டி வாழ்ந்து வரும் இம்மக்க ளுக்கு இது நாள் வரையில் குடும்ப அட்டை, ஆதார் அடையாள அட்டை, சாதி சான்றிதழ் என எந்தவொரு அரசு ஆவணங்களும் வழங்கப்படவில்லை. இதுகுறித்த தகவல் இணையதளத்தில் வைரலானது. இதனை கண்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் மதுக்கரை தாலுகா நிர்வாகிகள் விவே கானந்தன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அத்தகவல் உண்மை என்பதை அறிந்தனர். மேலும் உரிய சான்றி தழ்கள் இல்லாததால் அங்குள்ள மாணவர் கள் மேற்படிப்பு தொடர இயலாத நிலை ஏற்பட்டுள்ளதையும் கேட்டறிந்தனர்.
இதனைத்தொடர்ந்து கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கவனத்திற்கு கொண்டு சென்றனர். நாடா ளுமன்ற உறுப்பினரும் உடனடியாக கோவை மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு ரொட்டிக்கவுண்டனூர் பகுதி மக்களின் வாழ்நிலை குறித்தும், ஊரடங் கால் இம்மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளதையும் தெரிவித்தார். மேலும் வாலி பர் சங்கத்தினர் அதிகாரிகளை சந்தித்து இப்பகுதி மக்களுக்கு உடனடியாக உண வுப்பொருட்கள் வழங்க வேண்டும். ரேசன் அட்டை, சாதி சான்றிதழ், ஆதார் அட்டை களை வழங்க வேண்டும் என மனு அளித்த னர். இதனையடுத்து தற்போது கோவை மாவட்ட நிர்வாகத்தின் வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள், ரொட்டிக்கவுண் டனுர் பழங்குடி மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கான குடும்ப அட்டை உள்ளிட் டவற்றை வழங்குவதற்கான கணக்கெ டுப்பை மேற்கொண்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இப்பகுதி மக்களின் பிரச்சனைகள் குறித்து கவனத் திற்கு வந்துள்ளது. இவர்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சி யர் அறிவுறுத்தியுள்ளார். இதனடிப்படை யில் தற்போது கணக்கெடுப்பு நடத்தியுள் ளோம். ஓரிரு நாட்களில் இவர்களுக்கான ரேசன் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப்படும் என தெரிவித்தனர். இதைய டுத்து தங்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்ற முன்னிற்ற வாலிபர் சங்கத்தி னருக்கு அப்பகுதியினர் நன்றி தெரிவித்த னர்.