தமிழக முதல்வரிடம் விவசாயிகள் சங்கத்தினர் நேரில் முறையீடு
சேலம், பிப். 25- விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதை கைவிட வலி யுறுத்தி தமிழக முதல்வரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தினர் நேரில் மனு அளித்து முறை யிட்டனர். தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி செவ்வாயன்று சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு வருகை புரிந்தார். இதைத் தொடர்ந்து அரசு விருந்தினர் மாளிகையில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வா கிகள் நேரில் சந்தித்து மனு அளித் தனர். அதில் விளை நிலங்களில் ஐடிபிஎல் திட்டத்தின் எரிவாயு குழாய்களை பதிப்பதை கைவிட வேண்டும். நெடுஞ்சாலை வழியே இத்திட்டத்தை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.
இதேபோல், எடப்பாடி தாலுகா பகுதியில் ஐடிபிஎல் திட் டத்தால் பாதிக்கப்படும் நூற் றுக்கும் மேற்பட்ட விவசாயிகளும் கோரிக்கை மனுவினை அளித்த னர். இம்மனுக்களை தமிழக முதல் வர் எடப்பாடி கே.பழனிச்சாமி பெற்றுக் கொண்டார். முன்னதாக, இம்மனுக்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராம மூர்த்தி, மாவட்ட துணைத் தலை வர் பி.தங்கவேலு, நாமக்கல் மாவட்ட விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.பெரு மாள், முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் காவேரி, விவசாயிகள் சங்க ஒன்றிய நிர்வாகிகள் வெங்க டேஷ், சுப்ரமணி, ராசேந்திரன், லோகநாதன், சரவணன், தங்க ராஜ் உள்ளிட்டோர் முதல்வரிடம் அளித்தனர்.