tamilnadu

img

ஊழியர் விரோத நடவடிக்கையை கைவிடுக

சாலைப்பணியாளர்கள் சங்கம் தொடர் முழக்கப் போராட்டம்

கோவை ஜன. 24 –  நெடுஞ்சாலைத்துறை கோவை மாவட்ட கண்காணிப்பு பொறியாளரின் ஊழியர் விரோ தப் போக்கை கண்டித்து கோவை யில் வெள்ளியன்று ஊழியர்கள் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையின் கீழ் கோவை மாவட்ட  நெடுஞ்சாலைத்துறை செயல்படு கிறது. இங்குள்ள கோட்டப்பொ றியாளர் தொடர்ந்து ஊழியர் விரோத நடவடிக்கையில் ஈடு பட்டு வருகிறார். சட்டத்திற்கு புறம் பாக ஊழியர்களின் ஊதியத்தை  பிடிப்பது, சட்டப்படியான பலன் களை தர மறுப்பது, திட்டமிட்டே சாலைப் பணியாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்ப டுத்துவது உள்ளிட்ட நடவடிக்கை கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பல முறை  தொழிற்சங்கங்கள் புகார் தெரி வித்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து சாலைப்பணியாளர் சங்கத்தின் சார்பில் தொடர் முழக்க  போராட்டம் திருச்சி சாலை  கோவை மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு  நடைபெற்றது. இப்போராட் டத்தில் அதிகாரிகளின் ஊழியர் விரோத நடவடிக்கையை கைவிட வேண்டும். தொழிற் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர்.  முன்னதாக இப்போராட்டத் திற்கு கோவை,நீலகிரி, கோபி,  பொள்ளாச்சி கோட்ட தலைவர் கள் தலைமை வகித்தனர்.  சாலைப்பணியாளர் சங்கத்தின்  மாநில தலைவர்மா.பாலசுப்பிர மணியன் கண்டன உரையாற்றி னார். போராட்டத்தை வாழ்த்தி  சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்ம நாபன், அரசு ஊழியர் சங்க  மாவட்ட செயலாளர் சு.குமார்,  மாவட்ட பொருளார் சி.கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்டோர் உரை யாற்றினர். தமிழ்நாடு நெடுஞ்சா லைத்துறை சாலைப்பணியார் கள் சங்கத்தின் மாநில பொது செயலாளர் ஆ.அம்சராஜ் நிறைவு ரையாற்றினார். இதில், ஏராளமா னோர் பங்கேற்று ஆவேச முழக்கங்களை எழுப்பினார்.

;