tamilnadu

நூறு நாள் வேலை திட்டத்தில் சம்பள பாக்கி  விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு

கோவை, ஜன. 30–  நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய தொழிலா ளர்களின் சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் புதனன்று விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோவை மாவட்ட திட்ட அலுவலரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, கோவை மாவட்டத்தில் ஏழை, எளிய தொழிலாளர்கள் நூறுநாள் வேலை திட்டத்தில் பணி யாற்றி வருகின்றனர். இதன்மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து வரு கின்றனர். இந்நிலையில் நூறு நாள் வேலை திட்டத்தில் 40 முதல் 60 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகி றது. இதிலும் பொள்ளாச்சி, ஆனைமலை, பெரியநாயக்கன் பாளையம், மேட்டுப்பாளையம், சுல்தான்பேட்டை, எஸ்.எஸ்.குளம் ஆகிய ஒன்றியங்களில் வேலை செய்த விவ சாய கூலிகளுக்கு இரண்டு மாதங்களாக ஊதியம் வழங் கப்படவில்லை. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அன்றாடம் வேலை செய்து பிழைப்பு நடத்தும் இம்மக்க ளுக்கு சேரவேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மனுவை விதொச சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்வராஜ், தலைவர் துரைசாமி மற்றும் வெங்கடேஷ் உள்ளிட்டோர் அளித்தனர்.

;