tamilnadu

img

இந்தியப் பொருளாதாரம் பலவீனமடைந்து தனியார் பெரு முதலாளிகள் பலமடையும் ஆபத்தான போக்கு

எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி., பேச்சு 

தஞ்சாவூர், பிப்.25-  இந்தியப் பொருளாதாரம் பலவீன மடைந்து வரும் போது, தனியார் பெரு முதலாளிகள் பலமடைந்து வரும் ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது என்றார் தஞ்சாவூர் தொகுதி மக்க ளவை உறுப்பினரும், முன்னாள் மத்திய நிதித் துறை இணை அமைச்சருமான எஸ்.எஸ். பழனிமாணிக்கம். தஞ்சாவூரில் ஜனநாயக மேடை அமைப்பு சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற முற்போக்கு எழுத் தாளர்கள் கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், எம்.எம். கல்புர்க்கி, கௌரி லங் கேஷ் நினைவு கருத்தரங்கத்தில் அவர் பேசியதாவது: “உலக நாடுகளை மேலா திக்கம் செலுத்தக்கூடிய வகையில் இந்தியப் பெருளாதாரம் இருந்தது. தற்போது இந்த நிலை மாறி, உலக நாடுகளின் மேலாதிக்கத்துக்குக் கட்டுப் படும் வகையில் இந்திய பொருளாதா ரம் உள்ளது. இந்திய பொருளாதாரம் வளர்ச்சி நிலையில் உள்ளது என்ற தவறான தகவலை மத்திய நிதி அமைச்சர் நாடு முழுவதும் பேசி வருகிறார். ஆனால், இந்திய பொருளாதாரத்தைப் பாது காத்து வந்த எல்.ஐ.சி, இந்தியன் ஏர்லை ன்ஸ் போன்ற பொதுத் துறை நிறுவனங்க ளை விற்கும் நிலைக்கு மத்திய அரசு வந்திருக்கிறது என்றால், நமது பொ ருளாதார நிலைமையை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

இந்திய பொருளாதாரம் பலவீன மடைந்து வரும் நிலையில், தனியார் பெருமுதலாளிகள் பலமடைந்து வரும் ஆபத்தான போக்கு அதிகரித்து வரு கிறது. சிக்கன நடவடிக்கைகளை மேற் கொள்ளாமல் ஆடம்பரம் மற்றும் வீண் செலவினங்களை அரசு அதிகப் படுத்தியுள்ளது. நம் நாட்டில் நிதி பற்றாக்குறை ஈடு செய்யமுடியாத நிலையில் உள்ளது. இதனால், சேவை நிறுவனங்கள் பாதிக்கபட்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியின் சுய சார்புத் தன்மை பாதிக்கப்பட்டு அதுவும் ஒரு அரசுத் துறையாக மாற்றப்பட்டு விட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, கிராமப்புற மேம்பாடு, பொது சுகாதாரம் உள்ளிட் டவை மக்களுக்குப் பயனளிக்காத வகையிலேயே மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட் உள்ளது. 

மேட்டூர் அணையிலிருந்து வெளி யேறும் உபரி நீரை ஏரி, குளங்களில் சேமிக்க 611 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டத்தை அறிவித்த முதலமை ச்சர் அந்த திட்டத்திற்கு உடனே நிதி ஒதுக்கியுள்ளார். ஆனால் கல்லணைக் கால்வாய் மூலம் பாசனம் பெற்று வந்த நிலங்கள் தரிசாக மாறி வருகின்றன. இதனை மேம்படுத்திட ஆக்கப்பூர்வ மான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ளவில்லை. நபார்டு வங்கி உதவியுடன் நடைபெற்ற பணிகள் முழுமையாக நிறைவடைந்திருந்தால், கடைமடை பகுதி விவசாயம் மேம்பட்டி ருக்கும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டடலமாக மாநில அரசு அறிவித்த்து குறித்தும், தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து எரிவாய்வு திட்டங்களையும் உடனே தடை செய்யும் வகையில் சட்டம் இயற்றி இருக்க வேண்டும் எனபது குறித்தும், வேளாண் மண்டல சட்டம் நடைமுறைக்கு வரும முன்னர், இங்கே செயல்பட்டு வரும் திட்டங்களை தடுப்பது குறித்தும்  பாராளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி வழங்கவில்லை. தெளிவற்ற நடவடிக்கைகளை மத்திய,  மாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கல்வி, வேலை வாய்ப்பு, கிராமப்புற மேம்பாடு, பொது சுகாதாரம் குறித்து மக்களுக்கு பயனளிக்கும் நோக்கமில்லாத பட் ஜெட்டாகவே மத்திய மாநில அரசுக ளின் பட்ஜெட் உள்ளது” என்றார் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம். நிறைவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் ஆடிட்டர் பி.கிருஷ்ண மூர்த்தி நன்றி கூறினார்.
 

;