tamilnadu

கோவையில் மேலும் 74 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 700ஐ தாண்டியது

கோவை, ஜூலை 4– கோவையில் சனியன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது நாள் வரையிலான எண்ணிக்கையில் இது உட்ச பட்ச எண்ணிக்கையாகும். இதன்காரணமாக கோவையில் கொரோனா பதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700ஐ தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பு கோவையில் நாளுக்குநாள் அதிகரித்துவருவது பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் இதுவரையில் இல்லாத அளவிற்கு சனியன்று ஒரே நாளில் 74 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் கோவை குனியமுத்தூர், குறிச்சி, போத்தனூர் பகுதியில் ஒரே நாளில் 12  பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 6 பேர், இவர்கள் சமீபத்தில் அவிநாசி சாலையில் உள்ள துணிக்கடையில் மகளின் திருமணத்திற்க்காக துணிகள் வாங்கி வந்தது தெரியவந்துள்ளது. சம்பந் தப்பட்ட கனேஷ் ஷா துணிக்கடையின் ஊழியர்கள் 17 பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற் போது அந்தக் கடையில் துணி வாங்கச் சென்ற குடும் பத்தினர் அனைவருக்கும் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதேபோல் கோவை மையிற்கல் நியூயார்க் அவென்யூ அ௫கில் உள்ள அழகு நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நில அளவையர் மற்றும் அவ ரது மனைவி  இவருக்கும் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு ம௫த்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இந்நிலையில் சனியன்று அவரது உறவி னர்கள் அதே பகுதியைச் சேர்ந்த கணவன் (30), மனைவி(26) இ௫வர் மற்றும் அவர்களுடைய உறவி னருடைய 5 வயது குழந்தை மூன்று பே௫க்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து இவர்கள் கோவை இஎஸ்ஜ ம௫த்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.  

இதேபோல், செல்வபுரம் 13 பேர், தொண்டா முத்தூர் 8 பேர், போத்தனூர், நஞ்சுண்டாபுரம் பகுதி யில் 7 பேர், பீளமேடு 4 என குவியலாகவும் மற்றும் விளாங்குறிச்சி 1, இஎஸ்ஐ மருத்துவமனையில் 13 பேருக்கும், அரசுமருத்துவமனையில் 2, துடியலூர் 1, பொள்ளாச்சி 1, விமான நிலையம் 6,  என மொத்தம் 74 பேருக்கு சனியன்று தொற்று உறுதிசெய்யப் பட்டுள்ளது. இதன்படி கோவையில் கொரோனா வால் பதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 719 ஆக உயர்ந் துள்ளது. நாளுக்குநாள் கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பீதியை ஏற்படுத்தி யுள்ளது.

;