tamilnadu

திருப்பூர் மாவட்டத்தில் ஓராண்டில் 337 பேர் சாலை விபத்தில் மரணம் மாவட்ட காவல் துறை தகவல்

திருப்பூர், டிச. 31 – திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2019 ஓராண்டு காலத்தில் 1974 சாலை விபத்துகளில் 337 பேர் உயிரிழந்துள்ளனர் என்று திருப்பூர் மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட காவல் துறை சார்பில் செவ்வா யன்று அளிக்கப்பட்ட விபரங்க ளின் படி, திருப்பூர் மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டில் பதிவான கொலை, கொள்ளை உட்பட 234 குற்ற வழக்குகளில் 200 குற்ற வழக்குகள் (85 சதவிகிதம்) தீர்வு காணப்பட்டுள்ளது. இவற்றில் 2 ஆதாய கொலை, 2 கூட்டுக் கொள்ளை, 47 கொள்ளை மற்றும் வழிப்பறி, 149 திருட்டு வழக்குகள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இவ்வழக் குகளில் ஒரு கோடியே 20லட் சத்து 18 ஆயிரத்து 630 ரூபாய் மதிப்பிலான 472 பவுன் தங்க நகைகள் மற்றும் 28 நான்கு சக் கர வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டு உரியோரிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட் டுள்ளது.

35 பேர் குண்டர் சட்டத்தில் கைது

மேலும், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த காரணத்துக்காக 35 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப் பட்டவர்கள் சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர். இதில் 7 வழிப் பறி நபர்களும், 3 கஞ்சா விற்பனை நபர்களும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 6 நபர்களும், மணல் கொள்ளை தொடர்பாக ஒருவரும் அடங்குவர். குறிப்பாக திருப்பூர் புறநகர் பகுதிகளில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தொடர் வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த பீகாரை சேர்ந்த 4 பேர் கும்பல் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்

குழந்தைகளுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பந்த மாக பதிவான 41 வழக்குகளில் அனைத்திலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப் பட்ட நபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். குற்றப்பத்திரிக்கை விரைவாக தாக்கல் செய்யப் பட்டுள்ளது. விரைவாக சாட்சி களை ஆஜர்படுத்தியதில் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத் தியதன் மூலமாக 6 கொலை வழக்குகள், 11 வழிப்பறி கொள்ளை, 5 பூட்டை உடைத்து திருட்டு வழக்குகள் மற்றும் 16 பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான பாலியல் வழக் குகளில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 1974 சாலை விபத்துக்களில் 337 பேர் உயிரிழந்துள்ளனர். 1637 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 338 வழக்குகள் குறைவாக பதிவாகி யுள்ளன.

சாலை விபத்துகளைத் தடுக்க தொடர் நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வரும் நிலையில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 791 பேர் மீது தலைக்கவசம் அணியா மல் வாகனம் ஒட்டிய குற்றத் துக்காக வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. பின்னால் அமர்ந்த வர் தலைக்கவசம் அணியாமல் வந்ததற்காக 31 ஆயிரத்து 709 நபர்கள் மீதும், இதர வகைக ளில் ஒரு லட்சத்து 41 ஆயி ரத்து 32 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப் பட்டு, ரூ.3 கோடியே 25 லட்சத்து 10 ஆயிரத்து 860 அபரா தமாக நீதிமன்றத்தில் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. மது போதையில் வாகனம் ஓட்டியதற்காகவும், இதர குற்றங்களுக்காவும் 9ஆயி ரத்து 981 பேருக்கு ஓட்டுநர் உரி மம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மோட்டார் வாகன விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்து சம்பவ இடத்திலேயே மின்னணு பணப் பரிமாற்ற முறையில் அபராதம் செலுத்துவதற்கு அனைத்து காவல் அதிகாரிகளுக்கு நவீன இயந்திரம் வழங்கப்பட்டு, அதன் மூலமாக 60 ஆயிரத்து 666 வழக் குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.69 லட்சத்து 54 ஆயிரத்து 400 அப ராதத் தொகையாக நேரடியாக அரசு வங்கிக் கணக்கில் செலுத் தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் காணாமல் போன 348 நபர்களில் 283 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அதோடு 176 லாட்டாரி சீட்டு வழக்குகள், 156 சூதாட்ட வழக்கு கள், 41 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கஞ்சா வழக்குகள் தொடர்பாக 33 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

 

;