tamilnadu

கல்லூரி மாணவர் விடுதியில் மோதல் - 3 பேர் கைது

அவிநாசி, ஜன. 24- அவிநாசி அருகே செல்லப்பம்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி விடுதியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் கைது செய்யபட்டனர். சேவூர் அருகே  செல்லப்பம்பாளையத்தில் உள்ள அய்யன் திருவள்ளுவர் கலை, அறிவியல் கல்லூரி யில் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தங்கி படிக்க விடுதி யும் செயல்படுகின்றது இவ்விடுதியில் வியாழனன்று இரவு விடுதியில் தங்கி படித்து வரும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷேக் (20) என்ற மாணவனின் கைப்பேசி காணாமல் போனது. இதனைப் பக்கத்து அறையில் உள்ள மாணவர்கள் தான் எடுத்திருப்பர்கள் என சந்தேகமேற்பட்டது. இதையடுத்து அபிஷேக்குடன் தங்கியிருக்கும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தகுமார் (20), சத்தியப்ரியன் (20) ஆகியோரும் கைப்பேசி தேடி வந்தனர். அப்போது  அறையில் உள்ள அமீத் முபாரக், அஜீத், அட்சை ஆகியோரிடம் விசாரித் தனர். அது திடீரென கைகலப்பாக மாறியது. அப்போது அறையில் இருந்த பிளாஸ்டிக் பைப்பின் கூர்மையான பகுதியைக் கொண்டு அபிஷேக், வசந்தகுமார், சத்தியபிரியன் ஆகியோர் சரமாரி யாக தாக்கப்பட்டனர். இதில் வசந்தகுமார், சத்திய பிரியன் ஆகியோருக்கு கழுத்தில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. அபிஷேக்கிற்கு சிறிய காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பலத்த காயம் அடைந்த இருவரையும் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்த விசாரணையில் கூடலூர், மசினி குடியைச் சேர்ந்த அமீத்முபாரக் (20), அஜீத் (20),  அட்சை (20) ஆகிய மாணவர்கள் தாக்கியது தெரிய வருகிறது. இதையடுத்து  சேவூர் போலீசார் மூவரை யும் கைது செய்தனர்.

;