tamilnadu

img

டெங்கு காய்ச்சலுக்கு 13 பேர் அனுமதி

கோவை அரசு மருத்துவமனையில் 


கோவை, அக்.6- கோவை அரசு மருத்துவமனை யில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தமிழகத்தில் கடந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் ஐம்பதுக் கும் மேற்பட்டோர் பலியாகினர். இதையடுத்து சுகாதாரத்துறை தனது பல்வேறு கட்ட முயற்சிக ளின் மூலம் காய்ச்சல்கள் பரவு வதைத் தடுத்தது. மேலும், காய்ச்சலால் பாதிக்கப்படுபவர் களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை கொடுக்கும் வகையில் அரசு மருத் துவமனைகளில் சிறப்பு வார்டு கள் அமைக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில், தொடர் பருவமழை காரணமாக அனைத்து மாவட்டங் களிலும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகி றது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. இதன்ஒருபகுதியாக, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சை அளிக்க, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் தலா 20 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள் ளன. தற்போது, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் மூன்று வயது பெண் குழந்தை உள்பட 13 பேர் டெங்கு பாதிப்பால் சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், டெங்கு காய்ச்சல் பாதிப் புக்கு கோவையை சேர்ந்த 5 பேர், திருப்பூரை சேர்ந்த 3 பேர், நீலகிரியை சேர்ந்த 2 பேர்  சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவினாசியை சேர்ந்த 3 வயது பெண் குழந்தை உள்ளிட்ட அனை வருக்கும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். பொதுமக்கள் காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவ மனைகளில் பரிசோதனை செய் துக்கொள்ள வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் அறி வுறுத்தியுள்ளனர்.

;