நீலகிரி மாவட்டம், கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதைகள் பெயர்ந்து ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் மண் அரிப்பு தடுப்பு சுவர்களும் பல இடங்களில் இடிந்துள்ளது. ஆகவே சம்பந்தபட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.