tamilnadu

img

உயர்ந்து வரும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 10 ஆயிரம் வாழை மரங்கள் நீரில் மூழ்கி சேதம்

மேட்டுப்பாளையம், செப்.13- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அதன் நீர்தேக்க பகுதிகளில் உள்ள பத்தாயிரதிற்கும் மேற் பட்ட வாழை மரங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதேபோல், காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலமும் மூழ் கியுள்ளதால் அப்பகுதியினர் பெரும் வேதனைக்குள்ளாகியுள் ளனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் வழியே செல்லும் பவானியாறு மற்றும் மாயாறு ஆகிய இரு ஆறுகள் மூலம் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் செல்கிறது. 105 அடி உயரம் கொண்ட இந்த அணை அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பினால் அதன் நீர்தேக்க பகுதிகளான சுமார் 70  சதுர கி.மி சுற்றளவிற்கு நீர் தேங்கி நிற்கும். இதில் மேட்டுப்பாளையத்தில் உள்ள சிறுமுகை பகுதியிலுள்ள பல கிராமங்கள் பாதிக்கப்படும். இந்நிலையில் கடந்த இரு வார காலமாக பவானியாறு மற்றும் மாயாற்றின் நீர்பிடிப்பு பகுதி களில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து உயர்ந்து அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கி வருகிறது. இதனால் லிங்காபுரம் பகுதியில் காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 20 அடி உயர பாலம் நீரில் மூழ்கி வருகிறது.  இதனால் ஆற்றின் அக்கரை யில் உள்ள காந்தவயல், காந்தை யூர், உளியூர், ஆளூர் என நான்கு கிராம மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உயர்மட்ட பாலத்தின் மேல் வழிந்தோடும் நீரில் ஆபத்தான வகையில் கடந்து சென்று வரும் சூழல் உரு வாகியுள்ளது. குறிப்பாக பள்ளி சென்று திரும்பும் மாணவ, மாண விகளின் நிலை பரிதாபமாகி வரு கிறது. இன்னும் ஒரு அடி வரை பாலத்தின் மீதுள்ள நீரின் அளவு உயர்ந்தால் பாலம் மூழ்கி முற்றி லுமாக தரை போக்குவரத்து தடைபட்டு ஆற்றை கடக்க பரிச லில் பயணிக்க வேண்டிய நிலை வரும். மேலும், இப்பகுதியில் உள்ள மூலையூர் மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில் பயிரட பட்டிருந்த பத்தாயிரதிற்கும் மேற் பட்ட வாழை மரங்களை வெள் ளம் சூழ்ந்துள்ளது. நான்கடி உயரம் வரை நீரில் மூழ்கி உள்ள தால் இன்னும் இருபது நாளில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் அழுகி சாய்ந்து வருகின்றன. பதினோரு மாத பயிரான வாழை மரங்கள் அறு வடைக்கான கடைசி கட்டத்தில் சேதமாகி விட்டதால் இப்பகுதி வாழை விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. நீரில் மூழ்கிவிடும் 20 அடி பாலத்தை 32 அடியாக உயர்த்தி கட்டித்தர வேண்டும், நீரில் மூழ்கி சேதமான வாழைகளுக்கு உரிய இழப் பீடு வழங்கவேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை யாக உள்ளது. இந்நிலையில், நீரில் மூழ்கி  வரும் காந்தையாற்று பாலத்தின் மீது பயணிப்பது ஆபத்து என்ப தால் பாலத்தின் வழியே வாக னங்கள் செல்ல தடை செய்யப் படுவதாக சிறுமுகை காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.

;