tamilnadu

img

‘கொரோனா வைரஸ்’ குறித்து அச்சப்பட தேவையில்லை

சீனாவிலிருந்து வந்த மாணவர் தகவல்

அறந்தாங்கி, ஜன.31 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுற்று வட்டாரப் பகுதியில் கரோனா வைரஸ் பீதியால் சீனாவில் இருந்து அறந்தாங்கி வந்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அறந்தாங்கி, ஆயிங்குடி, கரூர், மீமிசல் உள்ளிட்ட பகுதி யைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாண வர்கள் உள்ளிட்ட 8 பேர் சீனாவில் இருந்து புதனன்று தாயகம் திரும்பினர். இந்நிலையில் கேரளாவில் கரோனா வைரஸ் ஒருவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சீனாவில் இருந்து தமிழகம் மற்றும் பல்வேறு மாநி லங்களுக்கு திரும்பும் அனைவருக்கும் விமான நிலையத்தில் உரிய முறையில் சுகா தாரத் துறை மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

இதனிடையே சீனாவில் ஜியாங்சி கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வரும் அறந்தாங்கி மருத்துவக் கல்லூரி மாணவர் அமிஸ்பிரியன், கரோனா வைரஸ் பாதிக் கப்பட்ட பகுதியிலிருந்து தனது மருத்துவ கல்லூரி 200 கிலோ மீட்டர் தூரம் உள்ள நிலையில், மற்ற மாணவர்கள் மற்றும் நிறு வனங்களில் பணிபுரிவோர் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக அனுப்பி வைக்கப்படுவதாகவும், காய்கறி மற்றும் உணவு வசதி இல்லாததால் கல்லூரி நிர்வா கம் சொந்த ஊருக்கு புறப்பட சொன்ன தாகவும் தெரிவித்தார். விமான நிலையங்களில் முதல் அறி குறியான லேசான காய்ச்சல் இருந்தாலே தனிப்பட்ட முறையில் அழைத்து, சீன அரசு முழுமையாக ஆய்வு செய்கிறது. சீனாவிலி ருந்து வரும் யாருக்கும் கரோனா வைரஸ் கிடையாது. அனைத்து விமான நிலையங்க ளிலிருந்தும் பரிசோதனைக்கு பின்னரே சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். கரோனா வைரஸ் தொடர்பாக பொது மக்கள் பீதியடைய வேண்டாம். அரசு பொது மக்களுக்கு கூடுதல்  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாணவர் அமிஸ்பிரியன் தெரிவித்தார்.

;