tamilnadu

img

முதல் சுற்றில் நல்ல முடிவுகளை கொடுத்த - கொரோனா தடுப்பூசி

பிரிட்டன் அரசு 100 மில்லியன் தடுப்பூசிகளை வாங்க ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளது

பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி, மனிதர்களின் உடலில் எந்த தீய விளைவுகளையும் ஏற்படுத்தாததுடன், கொரோனாவை எதிர்த்துப் போராட மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுவது முதல் சுற்றில் கண்டறியப்பட்டுள்ளது.

முதல் சுற்று மனிதப் பரிசோதனை

    முதல் சுற்று மனிதப் பரிசோதனை என்பது  , தடுப்பூசி 1,000 பேருக்குச் மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டு சோதிக்க வேண்டும்.

    இந்த தடுப்பூசி 1,077 பேருக்குச்  செலுத்தப்பட்டு சோதிக்கப் பட்டதாகவும்,  இந்த தடுப்பு மருந்து ரத்த வெள்ளை அணுக்களையும், ஆண்டிபாடிக்களையும் கொரோனா வைரசுக்கு எதிராகப் போராட வைக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

இருந்தாலும்

      பரிசோதனை முடிவுகள் நம்பிக்கை அளிக்கும் விதத்திலிருந்தாலும், கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாப்பாதற்கு இது போதுமானதா என இப்போதே கூற முடியாது. பெரும் திரளான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகே இறுதி முடிவு தெரியவரும்.

;