tamilnadu

img

அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை குறைகிறது...

நியூயார்க் 
உலகின் கொரோனா மையமாக உள்ள அமெரிக்காவில் மார்ச் மாதம் 2-வாரத்தில் கொரோனா வைரஸ் எழுச்சி பெற்றது. தொடக்கத்தில் மந்தமாகத் தனது ஆட்டத்தைத் தொடங்கினாலும் அடுத்த ஒரே வாரத்தில் ருத்ரதாண்டவமாடி அமெரிக்காவைத் திணற வைத்தது. அன்று தொடங்கிய ஆட்டம் தான் இன்று வரை குறையவில்லை. இதுவரை அங்கு 17 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 99 ஆயிரத்து 805 பேர் உயிரிழந்துள்ளனர். 4.64 லட்சம் பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறையவில்லை என்றாலும் பலி எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. அமெரிக்காவில் பெரும்பாலும் 1500-க்கும் அதிகமானோர் தினமும் பலியாகுவார்கள். ஆனால் கடந்த 2 தினங்களாகப் பலி எண்ணிக்கை 700-க்குள் தான் உள்ளது. மேலும் கொரோனாவை வென்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் உருக்குலைந்துள்ள நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸி ஆகிய மாகாணங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதால் அமெரிக்காவின் கொரோனா பாதிப்பில் சற்று மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.   

;