tamilnadu

img

ஷாகீன் பாக்கில் ஏன் யாரும் சாகவில்லை... மேற்குவங்க பாஜக தலைவர் திமிர்ப்பேச்சு

கொல்கத்தா:
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக, தில்லி ஷாகீன் பாக்-கில்நடைபெற்று வரும் போராட்டத்தில், ஏன் ஒருவர் கூட சாகவில்லை?என மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் திமிராக கேட்டுள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.“பணமதிப்பு நீக்கத்தின்போது, இரண்டு முதல் மூன்று மணிநேரம் ஏடிஎம் வாசலில் நின்றதில், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இறந்து போனதாக கூறினார்கள். ஆனால், இப்போது தில்லி ஷாகீன் பாக்கில், சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி சட்டங்களுக்கு எதிராகபெண்களும் குழந்தைகளும் 4-5 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தவெப்பநிலையில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் யாரும் இறக்கவில்லையே ஏன்?” என்று கேட்டுள்ளார்.

மேலும், இதைக் கண்டு தான் ஆச்சரியப்படுவதாகவும், “ஷாகீன்பாக் போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட மக்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாக உள்ளனர். அவர்களில் சிலர் தினமும் 500 ரூபாய் பெறுகிறார்கள் என்று கூறுகிறார்கள். அது உண்மையாக இருக்கலாம் அல்லது அவ்வாறு இல்லாமலும் இருக்கலாம். ஆனால் விரைவில் ஷாகீன் பாக் பற்றியஉண்மையும் வெளிப்படும்” என்றும் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியுள்ளார்.

;