tamilnadu

img

சிறுபான்மையினர் மத்தியிலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள்

கொல்கத்தா:
சிறுபான்மையினர் மத்தியிலும் தீவிரவாதிகள் உள்ளதாக மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.கடந்த திங்கட்கிழமையன்று கூச் பிகாரில் உள்ள மதன் மோகன் கோவிலில் வழிபாடு செய்த பின்னர், ராஜ்பாரிமைதானத்தில் நடைபெற்ற ‘ராஷ் மேளா’நிகழ்ச்சியில் மம்தா பேசியுள்ளார். அப்போதுதான் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.“நான் உன்னிப்பாக கவனித்துக்கொண்டு வருகிறேன்; சிறுபான்மையினர் மத்தியிலும் சில தீவிரவாதிகள் உள்ளனர்; ஹைதராபாத்தில் அவர்களுடைய தலைமையகம் உள்ளது; அவர்களின் குரலுக்கு செவிமடுக்காதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மம்தாவின் இந்த பேச்சு, மேற்குவங்க சிறுபான்மையினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்குவங்கத்தில், சுமார் 25 சதவிகிதம் அளவிற்குஉள்ள சிறுபான்மையினரின் வாக்குகளை மையப் படுத்தியே, கடந்த சில ஆண்டுகளாக  மம்தா பானர்ஜிஅரசியல் காய்களை நகர்த்தி வந்தார்.ஆனால், கடந்த 2019 மக்களவைத்தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியைத்தொடர்ந்து, பெரும்பான்மை இந்துக் களுக்கும் நெருக்கமானவராக தன்னைக் காட்டிக் கொள்ளும் விதமாக, திடீரென சிறுபான்மை தீவிரவாதம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.கூச்பிகார் கோயிலில், அத்தொகுதியின் பாஜக எம்.பி. நிதிஷ் பிரமாணிக்கடந்தவாரம் வழிபாடு நடத்தி காணிக்கைகளை செலுத்தினார். இது நடந்த 6 நாட்களில், மம்தாவும் அதே கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்துவிட்டு, அதன் பின்னரே சிறுபான்மை தீவிரவாதம் என்று பேசியுள்ளார்.

;