tamilnadu

img

பொம்மைகள் இறக்குமதிக்கு 200 சதவிகிதம் வரி அதிகரிப்பு... அதிர்ச்சியில் உறைந்த சில்லரை வியாபாரிகள்

கொல்கத்தா:
2020- 21 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், பொம்மைகள் மீதான இறக்குமதி வரி 200 சதவிகிதம் உயர்த்தப்பட்டு இருப்பதைக் கண்டு பொம்மை வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இந்த வரி உயர்வால், நாட்டிலுள்ள சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சில்லரை விற்பனையாளர்கள் கடும் பாதிப்பை சந்திப்பார்கள் என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேற்குவங்க ஏற்றுமதி - இறக்குமதி கூட்டமைப்பின் இணை செயலாளர் மோஹித் பந்தியா இதுதொடர்பாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.“இந்தியா ஆண்டுக்கு 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான பொம்மைகளை இறக்குமதி செய்கிறது. இதில், கொல்கத்தாவின் பங்கு 130கோடி ரூபாயாகும். அவ்வாறிருக்கையில், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி 20 சதவிகிதத்தில் இருந்து 60 சதவிகிதமாக- 200சதவிகிதம் அளவிற்கு உயர்த்தப் பட்டிருப்பது, பொம்மை வணிகத்தை கீழ் நோக்கித் தள்ளும். இதுவணிகங்களை மூடிவிடும். இதன்மூலம் வேலையின்மை அதிகரிக் கும். நாடு முழுவதும் பொம்மை விற்பனையில் ஈடுபட்டுள்ள ஒருலட்சத்திற்கும் அதிகமான சில்லரைவியாபாரிகள் பாதிக்கப்படுவர்” என்று அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.மேலும், “மத்திய அரசு உடனடியாக, பொம்மை இறக்குமதி வரிஉயர்வை திரும்பப் பெற வேண் டும்” என்று கூறியுள்ள மோஹித் பந்தியா, கொல்கத்தா வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் இதுதொடர்பாக கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.வரி உயர்வுக்கு எதிராக, கொல்கத்தாவைச் சேர்ந்த பொம்மைவியாபாரிகள், கடந்த சனிக்கிழமையன்று கடையடைப்பு போராட்டம் நடத்தியும், தங்களின் எதிர்ப் பைப் பதிவு செய்துள்ளனர்.

;