tamilnadu

குஞ்ஞாலிக்குட்டிக்கு என்னாச்சு? குர்ஆன் கடத்தி வரப்பட்டதல்ல: முதல்வர்

திருவனந்தபுரம்:
முஸ்லீம்லீக் தலைவர் குஞ்ஞாலிக்குட்டிக்கு என்ன நடக்கிறது என்பது தனக்கு புரியவில்லை என்றும் குர்ஆன் கடத்தி வரப்பட்டது என்று எந்த வகையிலும் கூற வாய்ப்பில்லை. சாதாரண நிலையில், இந்திய அரசின் சுங்கத்துறை அனுமதித்து தூதரகத்திற்கு குர்ஆன் அனுப்பப்படுகிறது. இதைத்தான் இங்கு விநியோகிக்க தூதரகம் அளிக்கிறது. இது எப்படி கள்ளக் கடத்தல் ஆகும்.ஒரு நியாயமான வழியில் அவர்கள் கொண்டு வந்ததல்லவா அது. அதை கள்ளக்கடத்தலாக சித்தரிக்க முடியுமா?, அதை அவ்வாறு பார்க்க வேண்டியதில்லை. குஞ்ஞாலிக்குட்டி இப்படி கூற காரணம் என்ன? ஒரு கட்டத்தில் தங்கம் கடத்த குர் ஆன் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மற்றொரு கட்டத்தில் குர்ஆனே கள்ளக் கடத்தல் என்று அவர்கள் கூறுகிறார்கள். பல லட்சக்கணக்கான நமது சகோதர சகோதரிகளை இதயத்தில் வைத்து பாதுகாப்பது ஐக்கிய அரபு அமீரகம் போன்ற ஒரு நாடாகும். இப்படி அவர்களை கள்ளக் கடத்தல்காரர்களாக சித்தரிக்கலாமா? வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று முதல்வர் கூறினார்.

;