கோழிக்கோடு, ஜுலை 2 - சாதாரண மரணத்தை லாக்கப் மரணமாக மாற்றியதும், அதில் தனது கணவரை சிக்க வைத்ததும் ஜாம்நகர் விஎச்பி தலைவர்களின் சதித்திட்டம் என குஜராத் மாநில முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் மனைவி ஸ்வேதா பட் தெரிவித்தார். 1990ஆம் ஆண்டு அப்போதைய பாஜக தலைவர் எல்.கே. அத்வானி யின் அயோத்தி ரத யாத்திரையை பீகாரில் தடுத்து நிறுத்தி அவர் கைது செய்யப்பட்டார். அதையொட்டி சங்பரிவார் அமைப்புகள் நடத்திய பெரும் கலவரம் நாடு முழுவதும் பற்றி எரிந்தது. குஜராத் ஜாம் நகரில் நடந்த கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 39 வயதான பிரபுதாஸ் வைஷ்ணனியும் ஒருவர். உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் இருந்த அவர் 1990 அக்டோபர் 30ஆம் தேதி உயி ரிழந்தார். அவர் உயிரிழந்ததற்கு காரணமே சஞ்சீவ் பட்தான் என பிரபுதாஸின் சகோதரர் ஜாம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். இந்த வழக்கு கடந்த வாரம் மீண்டும் ஜாம்நகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக் கை விசாரித்த நீதிபதிகள், சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினர். இந்நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சனியன்று பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ஸ்வேதா பட் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: வகுப்புக் கலவரத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஜாம் நகரைச் சேர்ந்த பிரபுதாஸ் வைஷ்னானி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவர் உயிரிழந்த பிறகு குடும்பத்தினர் எவரும் சஞ்சீவ் பட்டுக்கு எதிராக புகார் தெரி விக்கவில்லை. ஆனால் விஎச்பி தலைவர்கள் பிரபுதாஸின் சகோதரனை சந்தித்து லாக்கப் மரண மாக மாற்றினார்கள். பிரபு தாஸை சஞ்சீவ் பட் கைது செய்யவு மில்லை, அவரிடம் விசாரண நடத்தவு மில்லை. உடற்கூறாய்வு அறிக்கை யிலோ, மருத்துவக் குறிப்புகளிலோ மரணத்திற்கு வழக்கத்திற்கு மாறாக ஒன்றும் கண்டறியப்படவில்லை. ஆனாலும், எனது கணவரை வழக்கில் சிக்க வைக்க காரணம் அரசியல் பழிவாங்கலாகும். சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய ஜாம்நகர் செசன்ஸ் நீதிமன்ற உத்தரவுக்கு எதி ராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்வதற்கான தயாரிப்பில் உள்ளேன். அங்கு எங்கள் தரப்பு வாதங்களை முன்வைப்போம். நீதித்துறை மீதான நம்பிக்கை போய்விடவில்லை என அவர் குறிப்பிட்டார். நீதிக்கான பயணத்தில் கேரளத்தி லிருந்து கிடைத்துள்ள ஆதரவு வியப்பாக உள்ளது. ஒவ்வொரு பத்து நிமிடமும் கேரளத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்து கொண்டே இருக்கிறது. மனதள விலான ஆதரவு மட்டுமல்ல நிதி உதவிக்கான வாக்குறுதிகளும் அவற்றில் உள்ளன. ஆஸ்திரேலியா, கனடா போன்ற வெளிநாடுகளி லிருந்தும் தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. ஆனா லும் கேரளத்தின் ஆதரவு ஊக்க மளிப்பதாக உள்ளது. குஜராத் இனப்படுகொலை கலவரத்தில் சுட்டு கொல்லப்பட்ட காங்கிரஸ் தலைவர் ஜபான் ஜாப்ரி யின் மகள் நிப்ரின் ஜாப்ரி எனக்கு எழுதிய கடிதம் இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. போராடுவதற்கான உந்துதலே இத்தகைய ஆதரவுகள். அவளது குடும்பம் அனுபவித்த வலிகள் விவரிக்க முடியாதவை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அனேகமாக அனைத்து மாநிலங்களி லும் பாஜக பெரும்பான்மை பெற்ற போதிலும் கேரளத்தில் கணக்கை துவக்க முடியாததன் காரணம் இந்த மாநிலம் பெற்றுள்ள கல்வியின் சிறப்பாகும். மதச்சார்பற்ற மனதும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை யுமே மற்ற மாநிலங்களிலிருந்து கேரளத்தை வேறுபடுத்துகிறது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் முகமது ரியாஸும் ஆதரவு தெரி விக்கும் பொருட்டு எனது வீட்டுக்கு வந்திருந்தார். இந்த பிரச்சனையில் முக்கிய எதிர்க் கட்சியான காங்கிர ஸின் நிலைபாடு என்ன என்பது தெரியவில்லை. அவர்கள் அந்த கட்சியின் உள்விவகாரங்களைக் குறித்த கவலையில் உள்ளதாக தெரிகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான நம்பகத்தன்மையை சந்தேகத் தோடுதான் பார்க்க முடிகிறது. இயந்திரத்தில் முறைகேடுகளை தடுக்க முடியும் என நிபுணர்கள் கூறு கிறார்கள். அனைத்து திசைகளிலி ருந்தும் விமர்சனங்கள் எழுந்தபிற கும், ஆட்சியின் சாதனை என்று கூற ஏதும் இல்லாத நிலையிலும் மோடி மீண்டும் அதிகாரத்திற்கு வந்திருப்பது தேர்தல் மீதான அவ நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள் ளது. இங்கு ஜனநாயகமும், அடிப்படை உரிமைகளும் காகிதத்தில் மட்டுமே உள்ளதாக ஸ்வேதா பட் கூறினார்.
முன்னதாக, கடந்த வியாழனன்று (ஜுன் 27) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் முகமது ரியாஸ் அகமதாபாத்தில் உள்ள சஞ்சீவ் பட்டின் வீட்டில் அவரது மனைவி ஸ்வேதா பட்டை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது குஜராத் மாநில தலைவர் அல்தாப் ஹசேன், சமூக சேவகர் ஹலீம் சித்திக், இந்திய மாணவர் சங்க தலைவர் நிதீஷ் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது அவர்களிடம் பேசிய ஸ்வேதா, ஒருமுறைகூட சஞ்சீவ் பட்டின் காவலில் பிரபுதாஸும் அவரது கூட்டாளிகளும் இருந்ததில்லை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபுதாஸ் அப்போதும்கூட தன்னை தாக்கியதாக கூறவில்லை. அவரது சகோதரரும் விஎச்பி ஊழியருமான அமிர்த்லால் ஆதாரம் ஏதுமற்ற ஒரு புகார் அளித்தார். அதன்பேரில் எனது கணவர் தண்டிக்கப்பட்டுள்ளார் என்றார்.