tamilnadu

img

ஸ்ரீநாராயணகுரு திறந்தவெளி பல்கலைக்கழகம் காந்தி பிறந்தநாள் முதல் இயங்கும்... கேரள முதல்வர்

திருவனந்தபுரம்:
ஸ்ரீநாராயணகுருவின் பெயரில் கேரளத்தின் முதலாவது திறந்தவெளி பல்கலைக் கழகம் அமைக்கப்படுவதாகவும், அக்டோபர் 2 மகாத்மா காந்தி பிறந்தநாள் முதல் அது செயல்படத் தொடங்கும் எனவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். கேரளத்தின் முக்கிய துறைமுக நகரமான கொல்லம் இதன் தலைமையகமாக இருக்கும் எனவும் அவர் கூறினார். 

தற்போது நான்கு பல்ககைக் கழகத்தின் தொலைதூர கல்வி ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து திறந்தநிலை பல்கலைக்கழகம் துவக்கப்படுகிறது. எந்த வயதில் உள்ளவர்களும் இதில் படிக்கலாம். படிப்பை நிறைவு செய்ய முடியாதவர்களுக்கு அதுவரையிலான படிப்புக்கு ஏற்ப பட்டய (டிப்ளமோ) சான்று வழங்கப்படும்.பல்கலைக்கழகத்தில் தேசிய மற்றும் சர்வதேச ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்களின் ஆன்லைன் வகுப்புகள் இடம்பெறும். அரசு உதவி பெறும் கல்லூரிகளின் ஆய்வகம் மற்றும் பிற உட்கட்டமைப்புகள் புதிய பல்கலைக்கழகத்திற்கு பயன்படுத்தப்படும். பாரம்பரிய படிப்புகளுக்கு மேலதிகமாக, திறன் மேம்பாட்டு பாடமும் நடத்தப்படும். இதன்மூலம் கல்வியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதில் இது ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கமாக இருக்கும் என்று முதல்வர் கூறினார்.

;