திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் பல்வேறு பூத்துகளில் மறுவாக்குப்பதிவுக்கான அறிவிப்பு போதிய கால அவகாசமின்றி பிறப்பிக்கப் பட்டுள்ளதாகவும், யாருடையநிர்ப்பந்தத்துக்கு பணிந்து தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் கொடியேரி பாலகிருஷ்ணன் தெரிவித்தார். தேர்தல் ஆணையம் கவுரவத்துடன் செயல்பட தயாரில்லை எனவும், தொலை தூரங்களில் உள்ளவர்கள் வாக்களிப்பதற்கான வாய்ப்பை மறுத்துள்ளது எனவும் தேர்தல் ஆணையத்தின் மீது அவர் குற்றம் சாட்டினார்.
கள்ள ஓட்டு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கேரளத்தில் ஏழு பூத்துகளில் மறுவாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காசர்கோடு மக்களவை தொகுதியில் கல்யாசேரி பூத் எண் 19 பிலாத்தற யுபிஎஸ் பள்ளியிலும்,பூத் எண்69 புதியங்ஙாடி ஜுமாயத் எச்எஸ் ப வடக்கு கட்டடத்திலும், பூத் எண் 70 ஜுமாயத்எச்எஸ் தெற்கு கட்டடத்திலும், தளிப்பரம்பு பூத் எண்166 பாபுருத்தி மாப்பிள்ளை ஏயுபிஎஸ் ஆகிய இடங்களிலும், தர்மடம், வேணோடு, திருக்கரிப்பூர் ஜிஎச்எஸ் ஆகிய பூத்துகளிலும் ஏற்கனவே நடந்த வாக்குப்பதிவைரத்து செய்து மறுவாக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் சனியன்று செய்தியாளர்களை சந்தித்த
கொடியேரி பாலகிருஷ்ணன் மேற்கண்டவாறு கூறினார்.