tamilnadu

img

ரமேஷ் சென்னித்தலா பேச்சு அவமானகரமானது... நடவடிக்கை எடுக்க பிருந்தா காரத் வலியுறுத்தல்

திருவனந்தபுரம்:
கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ்சென்னித்தலாவின் பேச்சு அவமானகரமானது எனவும், இதற்கு எதிராக கேரளத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள ராகுல்காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத்வலியுறுத்தினார். மேலும் அவர் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். ரமேஷ் சென்னித்தலாவின் அணுகுமுறை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு பெண்ணுக்கும் எதிரானது. குற்றவாளிக்கு சாதகமானது. இதை கடுமையாக கண்டிக்கிறேன். அந்த பெண் ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். ரமேஷ் சென்னித்தலா மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பிருந்தா காரத் கூறினார். 

ஒட்டுமொத்த பெண் சமூகத்தையும் அவமதித்ததற்காக சென்னிதலா பொது மன்னிப்பு கோர வேண்டும் எனபல்வேறு தரப்பு பெண்கள் மற்றும்கலாச்சார ஆர்வலர்கள் கோரி வருகின்றனர். பெண்களை அடக்குவதற்கு தங்களுக்கு உரிமை உண்டு என்று ஒரு அரசியல் தலைவர் எப்படி சொல்லமுடியும் என்று அவர்கள் கேட்கிறார் கள். #Chennithala Should Apologise என்ற ஹேஷ்டேக் ஏற்கனவே சமூகஊடகங்களில் ட்ரெட்ண்டாக மாறிவிட்டது.

மன்னிப்பு கேட்க வேண்டும்: கே.கே.சைலஜா
பெண்களை அவமதிக்கும் வகையில் பேட்டி அளித்த எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா மன்னிப்புகோர வேண்டும் என சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்தார். பெண்களை துஷ்பிரயோகம் செய்யும் எந்தவொரு குற்றவாளிக்கும் சுகாதாரத் துறையில் இடம் இல்லை என்றுஅமைச்சர் கூறினார். பிரதீப் குமாரை சென்னித்தலா நியாயப்படுத்தியதை அமைச்சர் கண்டித்தார்.

;